அரசு: 20 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்தது

அரசு: 20 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்தது

1 mins read
d71156d4-b704-4713-95f8-5e73814794e5
-

சென்னை: தமி­ழ­கத்­தில் தற்­போது 20 மாவட்­டங்­களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்­துள்­ள­தாக சுகா­தா­ரத் துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அவர், கொரோனா விதி­மு­றை­க­ளைப் பின்­பற்றி நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்த அதி­கா­ரி­க­ளுக்கு பயிற்சி அளிக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பிட்­டார்.

தமி­ழ­கத்­தில் கொரோனா பாதிப்பு படிப்­ப­டி­யாக குறை­யத் தொடங்­கி­யுள்­ள­தாக தெரி­வித்த அவர், ராணிப்­பேட்டை, கிருஷ்­ண­கிரி, சேலம், திருப்­பூர், கோவை உள்­ளிட்ட மாவட்­டங்­களில் தொற்­றுப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்­து­வது சவா­லாக உள்­ளது என்­றார். இம்­மா­வட்­டங்­களில் தொற்று பாதிப்­பைக் குறைக்க போர்க்­கால நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் கூறி­னார்.

தமி­ழ­கத்­தில் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்கை கணி­ச­மா­கக் குறைந்­துள்­ளது என்­றும் வீடு­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டோர், மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டோர் என 211,000 பேர் தொற்று பாதிப்­புக்கு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர் என்­றும் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­தார்.

பாதிக்­கப்­பட்­டோ­ரில் ஐந்து விழுக்­காடு மட்­டுமே மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெறு­வ­தாக குறிப்­பிட்ட அவர், சென்­னை­யின் அனைத்து மண்­ட­லங்­க­ளி­லும் தொற்று குறைந்து வரு­கிறது என்­றார்.

"புது வகை­யான கொரோனா தொற்று பரவி வரு­வ­தாக சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­வ­ரும் வதந்­தி­களை நம்­பா­மல், அதி­கா­ர­பூர்வ தக­வலை மட்­டும் பொது­மக்­கள் நம்ப வேண்­டும்," என்­றார் ராதா­கி­ருஷ்­ணன்.

இதற்­கி­டையே, நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் அனை­வ­ரும் இரண்டு கொரோனா தடுப்­பூ­சி­களும் போட்­டுக் கொண்­ட­தற்­கான சான்­றி­தழ்­களை தங்­க­ளது வேட்­பு­ம­னுக்­க­ளு­டன் இணைக்க வேண்­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.