தனித்துக் களமிறங்கும் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தனித்துக் களமிறங்கும் பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

2 mins read
3a33b7af-4414-4201-8492-5681bf572f47
ஜி.கே.மணி. படம்: ஊடகம் -

சென்னை: பிப்­ர­வரி 19ஆம் தேதி நடை­பெற உள்ள நகர்ப்­புற உள்ளாட்­சித் தேர்­த­லில் தனித்து கள­மி­றங்­கு­கிறது பாட்­டாளி மக்­கள் கட்சி. இதை­ய­டுத்து முதற்­கட்ட வேட்­பா­ளர் பட்­டி­யலை அக்­கட்­சித் தலைமை நேற்று வெளி­யிட்­டது.

அதில் சென்னை, சேலம் மாவட்­டங்­க­ளுக்­கான வேட்­பா­ளர்­கள் இடம்­பெற்­றுள்­ள­னர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதி­முக கூட்­ட­ணி­யில் இடம்­பெற்று இருந்­தது பாமக. அதன் பின்­னர் நடை­பெற்ற ஊரக உள்­ளாட்சி இடைத்­தேர்­த­லில் அதி­முக கூட்­ட­ணியை விட்டு வெளி­யேறி, தனித்­துப் போட்­டி­யிட்­டது.

மொத்­தம் ஒன்­பது மாவட்­டங்­களில் போட்­டி­யிட்ட அக்­கட்­சி­யால் எதிர்­பார்த்த அள­வில் பெரிய வெற்­றி­யைப் பெற முடி­ய­வில்லை. எனி­னும் திரா­வி­டக் கட்­சி­க­ளு­டன் இனி கூட்­டணி கிடை­யாது என்று பாமக தலைமை தொடர்ந்து கூறி வந்­தது.

இத­னால், நகர்ப்­புற உள்­ளாட்சித் தேர்­த­லில் பாமக தனித்து கள­மி­றங்­குமா அல்­லது வேறு கட்­சி­க­ளு­டன் கூட்­டணி அமைக்­குமா என்ற விவா­தம் கடந்த சில நாள்­க­ளாக நீடித்து வந்­தது.

இந்­நி­லை­யில் அதி­முக தலைமை குறித்து பாமக நிறு­வ­னர் ராம­தாஸ் திடீ­ரென சில விமர்­ச­னங்­களை முன்­வைத்­தார். குறிப்­பாக, அதிமுக கட்­சித் தலைமை வலு­வாக இல்லை என்­றும் தொண்­டர்­களை அக்­கட்­சித் தலைமை சரி­யாக பயன்­ப­டுத்­த­வில்லை என்­றும் ராம­தாஸ் விமர்­சித்து இருந்­தார்.

இந்­நி­லை­யில், நேற்று நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான முதல் வேட்­பா­ளர் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது பாமக தலைமை. அதில், சென்­னை­யில் 148 வார்­டு­க­ளுக்­கான வேட்­பா­ளர்­க­ளின் பெயர்­கள் இடம்­பெற்­றுள்­ளன. மேலும் சேலம் மாவட்­டத்­தில் 60 வார்­டு­க­ளுக்­கான வேட்­பா­ளர்­களும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இந்த நிலை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய பாமக தலை­வர் ஜி.கே.மணி, நகர்ப்­புற உள்­ளாட்சி தேர்­த­லில் பாமக மிகப்­பெ­ரிய வெற்­றி­யைப் பதிவு செய்­யும் என்ற நம்­பிக்கை உள்­ள­தா­கக் குறிப்­பிட்­டார்.

"பாம­க­வுக்கு மக்­கள் ஆத­ரவு கொடுப்­பார்­கள் என்ற நம்­பிக்கை உள்­ளது. எங்­க­ளுக்கு நம்­பிக்கை அளிக்­கும் வித­மாக இந்த தேர்­தல் அமை­யும் என எதிர்­பார்க்­கி­றோம்," என்­றார் ஜி.கே.மணி.

இம்­முறை பிரா­ம­ணர்­கள் தொடங்கி அனைத்து சமூ­கத்­தி­ன­ருக்­கும் பாமக வாய்ப்பு வழங்கி உள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், பாமக வேட்­பா­ளர்­களில் அதிகமான புதுமுகங்கள், இளை­ஞர்­கள், வழக்­க­றி­ஞர்­கள், படித்­த­வர்­கள் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் உள்­ள­தா­கத் தெரி­வித்­தார்.

அனைத்து சமூகத்தினருக்கும் வாய்ப்பு வழங்குவோம் என ஜி.கே.மணி சூளுரை