தரையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட பள்ளி ஆசிரியர்கள்

தரையில் கட்டிப்புரண்டு சண்டையிட்ட பள்ளி ஆசிரியர்கள்

1 mins read
653fefc4-6a83-4159-b864-7d7706356ee1
-

தி.மலை: குடி­ய­ரசு தின விழா­வுக்கு தாம­த­மாக வந்­த­தைக் கண்­டித்­த­தலைமை ஆசி­ரி­ய­ருக்­கும் மற்­றொரு ஆசி­ரி­ய­ருக்­கும் இடையே ஏற்­பட்ட மோதல் கட்­டிப்­பு­ரண்டு சண்டை போடும் அள­வுக்கு முற்­றி­யது.

திரு­வண்­ணா­மலை மாவட்­டத்­தில் உள்ள கட­லாடி அரசு மேல்­நி­லைப் பள்­ளி­யில் கடந்த 26ஆம் தேதி தலைமை ஆசி­ரி­யர் அண்­ணா­மலை (58 வயது) தலை­மை­யில் குடி­ய­ரசு தின விழா கொண்­டா­டப்­பட்­டது. இவ்­வி­ழா­வுக்கு மாற்­றுத்­திறனாளி­யான செழி­யன் (50 வயது) உள்­ளிட்ட ஐந்து ஆசி­ரி­யர்­கள் தாம­த­மாக வந்­ததை கண்­டித்­துள்­ளார் அண்­ணா­மலை. இதை­ய­டுத்து, மறு­நாள் அவ­ருக்­கும் செழி­ய­னுக்­கும் இடையே வாக்­கு­வா­தம் மூண்­டது.

அப்­போது இரு­வ­ரும் சட்டையைப் பிடித்து இழுத்து, தரை­யில் கட்டிப்­புரண்டு சண்­டை­யிட்­டுள்­ள­னர்.இதை காணொ­ளி­யா­கப் பதிவு செய்த ஒரு­வர், சமூக வலைத்­தளங்­களில் வெளி­யிட்­டதை அடுத்து, அது பர­வ­லா­கப் பகி­ரப்­பட்­டது.

இதை­ய­டுத்து, இரு­வ­ரும் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டுள்­ள­னர்.