ரூ.13.74 லட்சம் ரொக்கப் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்; பறக்கும் படை அதிரடி

ரூ.13.74 லட்சம் ரொக்கப் பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்; பறக்கும் படை அதிரடி

2 mins read
5f7d0cdb-26f8-490c-ae2f-668b095911ae
-

சென்னை: உரிய ஆவ­ணங்­கள் இன்றி வாக­னங்­களில் கொண்டு செல்­லப்­பட்ட ரொக்­கப் பணம், பொருள்­களை சென்­னை­யில் தேர்தல் பறக்­கும் படை­யி­னர் பறி­மு­தல் செய்­த­னர்.

தமி­ழ­கத்­தில் அடுத்த மாதம் ஒரே கட்­ட­மாக நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் நடை­பெற உள்­ளது. இதை­ய­டுத்து மாநி­லம் முழு­வ­தும் தேர்­தல் நடத்தை விதி­மு­றை­கள் அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

சென்­னை­யில் பல்­வேறு பகு­தி­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த அர­சி­யல் கட்­சி­க­ளின் பதா­கை­கள், சுவ­ரொட்­டி­கள், சுவர் விளம்­ப­ரங்­கள் ஆகி­யவை அகற்­றப்­பட்­டுள்­ளன.

கடந்த மாதம் 26ஆம் தேதி தேர்­தல் அறி­விப்பு வெளி­யா­னது. இதை­ய­டுத்து அன்று மாலையே தேர்­தல் நடத்தை விதி­கள் அமலுக்கு வந்­த­விட்­ட­தால் தேர்­தல் அதி­கா­ரி­கள் கண்­கா­ணிப்பை தீவிரப்­ப­டுத்தி உள்­ள­னர்.

தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்­காக வாக்­கா­ளர்­க­ளுக்­குப் பணம், பரி­சுப் பொருள்­கள் வழங்­கு­வதை தடுக்க மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் பல்­வேறு பறக்­கும் படை­களை அமைத்­துள்­ளது.

இப்­ப­டை­யி­னர் மாநி­லம் முழு­வதும் ஆங்­காங்கே திடீர் சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

அதன்­படி சென்­னை­யில் 45 பறக்­கும் படை­கள் அமைக்­கப்­பட்டுள்­ள­தா­க­வும் அப்­ப­டை­கள் 24 மணி நேர கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் தேர்­தல் ஆணைய தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

கடந்த மூன்று நாள்­களில் மட்டும் சென்­னை­யில் ரூ.13.74 லட்­சம் மதிப்­புள்ள ரொக்­கப் பணம், பரி­சுப் பொருள்­களைப் பறக்­கும் படை­யி­னர் பறி­மு­தல் செய்­துள்ளனர்.

சென்னை மாந­க­ரில் மட்­டும் இது­வரை 13,399 பதா­கை­கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தா­க­வும் 1,920 சுவர் விளம்­ப­ரங்­கள் அழிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் தேர்­தல் ஆணை­யம் கூறி­யுள்­ளது. மேலும், பல இடங்களில் பத்­தா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்ட சுவ­ரொட்­டி­களும் கிழிக்­கப்­பட்­டுள்­ளன.

இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வாகனச் சோதனைகளும் நடைபெற்று வருகின்றன.