அமாவாசையை ஒட்டி நேற்று ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடலில் ஆயிரக்கணக்கானோர் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி தீர்த்தக் கடலில் நீராட அனுமதி அளிக்கப்பட்டதால் நேற்று ராமேசுவரத்தில் ஏராளமான வெளி மாவட்ட, வெளி மாநிலத்தவர்கள் குவிந்தனர்.
ஆடி, புரட்டாசி, தை ஆகிய மாதங்களில் வரக்கூடிய அமாவாசை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
படம்: ஊடகம்

