பாஜக: தொண்டர்கள் விருப்பப்படி தனித்துப் போட்டியிட முடிவு

பாஜக: தொண்டர்கள் விருப்பப்படி தனித்துப் போட்டியிட முடிவு

2 mins read
592e5ee4-7ada-4a23-9d22-c27438233e7c
-

சென்னை: தமி­ழக நகர்ப்­புற உள்ளாட்­சித் தேர்­த­லில் பாஜக தனித்துப் போட்­டி­யி­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சென்­னை­யில் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அக்­கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை, அதி­முக தலைமை மீது பாஜ­க­வுக்கு எந்­த­வித வருத்­த­மும் இல்லை என்­றார்.

நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் தேதி அறி­விக்­கப்­பட்­டதை அடுத்து, அதி­முக, பாஜ­க இடையே கடந்த சில தினங்­க­ளாக இடப்­பங்­கீடு குறித்து பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வந்­தது.

பாஜக மொத்­த­முள்ள இடங்­களில் சுமார் 35 விழுக்­காடு இடங்­களைக் கேட்­ட­தா­க­வும் அதி­முக தலை­மையோ எட்டு விழுக்­காடு இடங்­களை மட்­டுமே ஒதுக்க முடி­யும் என்று திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­ய­தா­க­வும் தக­வல் வெளி­யா­னது.

அடுத்­த­டுத்த பேச்­சு­வார்த்­தை­களின்­போது 20 விழுக்­காடு வரை பாஜக இறங்­கி­வந்த நிலை­யில், அதி­முக தலைமை தனது நிலைப்­பாட்­டில் பிடி­வா­த­மாக இருந்­த­தால் சுமூக உடன்­பாடு ஏற்­ப­ட­வில்லை.

இதை­ய­டுத்து, கட்­சி­யின் மேலிட உத்­த­ர­வின்­படி, இம்­முறை தனித்துப் போட்­டி­யி­டு­வ­தாக அண்­ணா­மலை தெரி­வித்­தார்.

மூத்த தலை­வர்­க­ளான ஓ.பன்­னீர்­செல்­வம், எடப்­பாடி பழ­னி­சாமி ஆகிய இரு­வ­ரும் தாம் நேசிக்­கும் தலை­வர்­கள் என்று குறிப்­பிட்ட அவர், அதி­முக தலை­வர்­கள் மீது எந்த வருத்­த­மும் இல்லை என்­றார்.

"நகர்ப்­புற தேர்­த­லில் தனித்­துப் போட்டி என்­றா­லும் தேசிய ஜன­நாயகக் கூட்­டணி என்­பது தொட­ரும். தனித்­துப் போட்­டி­யி­டு­வது என்­பது கடி­ன­மான முடிவு அல்ல.

"தொண்­டர்­க­ளின் கோரிக்கைக் குச் செவி சாய்த்­துள்­ளோம். விரை­வில் தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள வார்­டு­க­ளுக்­கான வேட்­பா­ளர் பட்டியலை வெளி­யிட உள்­ளோம்," என்­றார் அண்­ணா­மலை.

இதை­ய­டுத்து, பாஜக வேட்­பாளர் பட்­டி­யலை இறுதி செய்­யும் நட­வ­டிக்கை உட­ன­டி­யா­கத் தொடங்கி உள்­ளது. அநே­க­மாக, இன்று காலை அப்­பட்­டி­யல் வெளி­யா­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இன்று முதல் தேர்­தல் பிர­சா­ரம் சூடுபிடிக்­கும்

இதற்­கி­டையே, இன்று முதல் தேர்­தல் களத்­தில் பிர­சா­ரம் தீவி­ர­மடை­யும் என அர­சி­யல் கவனிப் பாளர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஒவ்­வொரு வார்­டி­லும் நில­வும் பிரச்­சி­னை­க­ளைப் பட்­டி­ய­லிட்டு கட்­சித் தலை­மை­ய­கத்­துக்கு அனுப்ப வேண்­டும் என திமுக தலைமை வேட்­பா­ளர்­க­ளுக்­கும் கட்சி நிர்­வா­கி­க­ளுக்­கும் உத்­த­ர­விட்­டுள்­ளது.

அப்­பி­ரச்­சி­னை­க­ளுக்குப் போர்க்­கால அடிப்­ப­டை­யில் தீர்வு காண்­பது அல்­லது தீர்­வுக்­கான நட­வ­டிக்­கை­க­ளைத் தொடங்கி மக்­க­ளின் நம்­பிக்­கை­யைப் பெறு­வது என பிர­சார வியூ­கத்தை வகுத்­துள்­ளது.

இதற்­காக திமுக தலை­மை­யகத்­தில் தற்­கா­லிக தேர்­தல் செயல்­பாட்டு அலு­வ­ல­கம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. கூட்­ட­ணிக் கட்­சி­கள் போட்­டி­யி­டும் வார்­டு­க­ளைக் கைக­ழுவி விடக்­கூ­டாது என்­றும் திமுக தலைமை நிர்­வா­கி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

அதி­முக, பாஜக உள்­ளிட்ட எதிர்க்­கட்­சி­கள் திமுக அரசு செயல்­ப­ட­வில்லை என்­றும் மக்­கள் நலப் பணி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்டு, தேர்­தல் களத்­தில் பிர­சா­ரம் மேற்­கொள்ள இருப்­ப­தா­கத் தெரி­கிறது.

இந்­திய ஜன­நா­யகக் கட்சி, நடிகர் விஜய்­யின் ரசி­கர் மன்ற அமைப்பு என சில தரப்­பி­னர் தனித்து களம் காண்­கின்­ற­னர்.

அவற்­றின் சார்­பா­கப் போட்­டியிடு­வோர் தத்­தம் வார்­டு­களில் உள்ள நில­வ­ரத்­துக்கு ஏற்ப பிர­சா­ரம் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முதல் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கும் என எதிர்பார்ப்பு