விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

2 mins read
66a5cdb8-ad1a-4a67-9210-1055cf78a697
-

சென்னை: தமி­ழ­கத்­தில் விமானப் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை அதி­கரித்­துள்­ள­தாக இந்­திய விமான நிலைய ஆணை­யம் தெரி­வித்­துள்ளது.

2021 - 2022ஆம் நிதி­யாண்­டின் முதல் ஒன்­பது மாதங்­களில் மட்­டும் தமி­ழ­கத்­தில் சுமார் 8.3 மில்­லி­யன் பேர் விமா­னச் சேவை­யைப் பயன்படுத்தி உள்­ள­தாக அந்த ஆணையம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

இதே கால­கட்­டத்­தில் கடந்த 2020-21ஆம் நிதி­யாண்­டில் இந்த எண்­ணிக்கை நான்கு மில்­லி­ய­னாக இருந்­த­தாக அந்த அறிக்­கை­யில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

நடப்பு நிதி­யாண்­டில் இது­வரை 85,606 விமானச் சேவை­கள் மூலம் 8.3 மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­துள்­ள­னர் என்­றும் குறிப்­பிட்­டுள்ள இந்­திய விமான நிலைய ஆணையம், முந்­தைய நிதி­யாண்­டில் 50,830 விமானச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்தி சுமார் 4 மில்­லி­யன் பேர் பய­ணம் மேற்­கொண்­ட­தா­கத் தெரி­வித்­துள்­ளது.

"நடப்பு நிதி­யாண்­டில் இது­வரை 34,776 கூடுதல் விமானச் சேவை­கள் மூலம் 4.2 மில்­லி­யன் பேர் கூடு­த­லாக பய­ணம் மேற்­கொள்ள முடிந்­தது.

ஆக அதி­க­மாக சென்னை விமான நிலை­யத்­தில் இருந்து 65,970 விமானச் சேவை­கள் வாயிலாக சுமார் 6.4 மில்­லி­யன் பேர் பய­ணம் செய்­துள்­ள­னர். கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது 3.56 மில்­லி­யன் அதி­கம்.

"கோவை, திருச்சி, மதுரை, துாத்துக்­குடி விமான நிலை­யங்­களி­லும் விமான சேவை­கள், பய­ணி­களின் எண்­ணிக்கை வெகு­வாக அதி­க­ரித்­துள்­ளது," என இந்­திய விமான நிலைய ஆணை­யம் தனது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, சேலம் விமான நிலை­யத்­தில் மட்­டும் முந்­தைய ஆண்­டை­விட ஒப்­பீட்டு அள­வில் நடப்­பாண்­டில் பய­ணி­க­ளின் எண்­ணிக்கை 72.5 விழுக்­காடு சரிவு கண்­டுள்­ளது.