ஸ்டாலின்: குற்ற வழக்குகள் இருப்பின் வாய்ப்பு இல்லை

ஸ்டாலின்: குற்ற வழக்குகள் இருப்பின் வாய்ப்பு இல்லை

1 mins read
29a7a8c9-4b92-474e-b47b-dd3575df7498
-

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான திமுக வேட்­பா­ளர்­கள் தேர்வு என்­பது ராணுவ வீரர்­க­ளைத் தேர்வு செய்­வது போன்ற நெறி­மு­றை­க­ளு­டன் கண்­டிப்­பா­ன­தா­க­வும் கட்­டுக்­கோப்­பா­ன­தா­க­வும் இருக்க வேண்­டும் என அக்­கட்­சித் தலை­வ­ரும் தமி­ழக முதல்­வ­ரு­மான மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.

குற்ற வழக்­கு­களை எதிர்­கொண்­டுள்­ள­வர்­க­ளுக்­குத் தேர்­த­லில் போட்­டி­யிட வாய்ப்பு வழங்­கப்­பட மாட்­டாது என்­றும் அவர் திட்­ட­வட்­ட­மா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

"குற்­றப் பின்­னணி ஏதே­னும் இருந்­தால், அவை தொடர்­பான வழக்­கு­களில் தன்னை நிர­ப­ராதி என்று சட்­ட­பூர்­வ­மாக நிரூ­பிக்­கும் வரை அவர்­களை நிச்­ச­ய­மாக வேட்­பா­ள­ரா­கத் தேர்வு செய்­தி­டல் கூடாது. இதைக் கட்சி நிர்­வா­கி­கள் தவ­றா­மல் மன­தில் கொள்ள வேண்­டும்," என முதல்­வர் ஸ்டா­லின் வலி­யு­றுத்தி உள்­ளார்.

திமுக வேட்­பா­ளர்­க­ளைத் தேர்வு செய்­வ­தில் நடு­நிலை தேவை என்­றும் சொந்த விருப்பு வெறுப்­பு­கள் சிறி­த­ள­வும் தலை­யெ­டுக்க அனு­ம­திக்­கவே கூடாது என்­றும் அவர் கட்சி நிர்­வா­கி­க­ளைக் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

"வேட்­பா­ளர் தேர்வு, கூட்­டணி கட்­சி­க­ளுக்­கான இடப் பங்­கீடு, வாக்கு சேக­ரிப்பு ஆகி­ய­வற்றை திமுக நிர்­வா­கி­கள் பொறுப்­பு­டன் மேற்­கொள்ள வேண்­டும்," என முதல்­வர் மு.க.ஸ்டா­லின் தெரி­வித்­துள்­ளார்.