ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் கின்னஸ் சாதனை முயற்சிக்காக கண்களைக் கட்டிக்கொண்டு சிறுவர்கள் சிலம்பம் சுழற்றினர்.
இந்நிகழ்வு சுமார் இரண்டு மணி நேரம் நீடித்தது. ஓய்வெடுக்காமல் சிறுவர்கள் மேற்கொண்ட இந்த சாகச நிகழ்வு குறித்த விவரங்கள் கின்னஸ் அமைப்புக்கு அனுப்பப்படும் என்றார் சிலம்பப் பயிற்சியாளர் அம்சவர்தன்.

