தஞ்சை பெரிய கோயில் சித்திரை திருவிழா ஆயத்தம்

1 mins read
db09f129-3fb1-4e9b-a715-faf91c6ee3c7
-

உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு சித்திரை திருவிழா, மார்ச் 30ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 16ஆம் தேதி வரை 18 நாள்கள் கொண்டாடப்படுகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி பஞ்சமூர்த்தி புறப்பாடும் ஏப்ரல் 13ஆம் தேதி தேரோட்டமும் நடக்கும். சித்திரை திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்றுக் காலை நடந்தது. படம்: தமிழக ஊடகம்