சென்னை: தமிழகத்தில் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சென்னை மருத்துவமனை ஒன்றின் கொரோனா நோயாளிகள் பிரிவில் நேற்று ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். தமிழகத்தில் புற்றுநோயால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் குறிப்பாக பெண்களைவிட ஆண்களுக்குப் புற்றுநோய் உட்பட அதிகப்படியான நோய்கள் பரவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆகையால் தொற்றாத நோய்கள் மீதும் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நல்வாழ்வுத்துறை செயலாளர் வலியுறுத்தினார்.

