ஏடிஎம்மில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

புதுச்­சேரி: புதுச்­சே­ரி­யில் ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் பணம் எடுக்­கச் சென்ற ஆட­வர் ஒரு­வர், ஏற்­கெ­னவே பணம் எடுக்க வந்த ஒரு­வர் இயந்­தி­ரத்­தி­லேயே விட்­டுச் சென்­றி­ருந்த ரூ.10,000 பணத்தை எடுத்து காவல்­துை­ற­யில் ஒப்­ப­டைத்­தார்.

அவ­ரது நேர்­மை­யான குணத்தை காவல்­துறை உயர் அதி­காரி முரு­கா­னந்­தம் பாராட்­டி­னார்.

புதுச்­சே­ரி­யில் உள்ள முருங்­கப்­பாக்­கம் பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சுந்­த­ர­மூர்த்தி. இவ­ரது மனைவி சாந்தி. இவர், பிள்­ளை­யார் குப்­பத்­தில் உள்ள தனி­யார் மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் பணி­பு­ரிந்து வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், கடந்த மாதம் 6ஆம் தேதி, பிள்­ளை­க­ளின் படிப்­புச் செல­வுக்­காக மருத்­து­வ­மனை வாயி­லில் உள்ள ஏடி­எம்­மில் ரூ.10,000 பணம் எடுக்க முயன்­றுள்­ளார். ஆனால், இயந்­தி­ரத்­தில் இருந்து பணம் வரா­த­தால் அவர் அங்­கி­ருந்து சென்­று­விட்­டார். பின்­னர் இது­கு­றித்து வங்­கி­யில் புகார் கூறி­னார்.

இத­னி­டையே, புவ­ன­கிரி சிலம்பி மங்­க­ளத்­தைச் சேர்ந்த சந்­தி­ர­கு­மார் என்ற ஆட­வர், அந்த ஏடி­எம்­மில் பணம் எடுக்­கச் சென்­ற­போது, இயந்­தி­ரத்­தில் ரூ.10,000 பணம் இருந்­தது. அதை எடுத்து கிரு­மாம்­பாக்­கம் காவல்­நி­லை­யத்­தில் ஒப்­ப­டைத்­து­விட்­டுச் சென்­று­விட்­டார்.

இது­தொ­டர்­பாக கிரு­மாம்­பாக் கம் உயர் காவல் அதி­காரி முரு கானந்­தம் சம்­பந்­தப்­பட்ட வங்­கிக் கிளைக்கு தக­வல் தெரி­வித்து, வங்கி ஊழி­யர் ராம­ராஜ் முன்­னி­லை­யில் ரூ.10,000 பணத்தை சாந்தி­யி­டம் ஒப்­ப­டைத்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!