57,778 பேர் போட்டி; 218 பேர் போட்டியின்றி தேர்வு; நான்கு நாள்கள் மதுக்கடை அடைப்பு அனைத்து மாவட்டங்களிலும் வேட்பாளர்கள் நூதனப் பிரசாரம்

சென்னை: தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்காளர்களைக் கவர்வதற்காக விதவிதமான வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரு சில வேட்பாளர்கள் அப்பள மாலைகளை அணிந்தும் பம்பரம் விட்டும் துணிகளைச் சலவை செய்து தந்தும் வித்தியாசமான முறையில் வாக்குகள் கேட்டனர்.

மதுரை மாவட்டம், திருமங்க லத்தில் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெ.டி.விஜயன், அங்குள்ள ஒரு உணவகத்தில் கொத்து பரோட்டா போட்டுக்கொடுத்து அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார்.

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை நகராட்சிக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பழனி, 56, ஒருபுறம் மூட்டை தூக்கும் பணி யையும் மறுபுறம் பிரசாரத்தையும் தொடர்ந்து வருகிறார்.

"சாதாரண ஒரு 'லோடுமேன்' தொழிலாளிக்கு ஒருமுறை வாய்ப்புக் கொடுங்கள். எனக்கு ஏழைகளின் சிரமம் நன்கு தெரியும். உங்களுக்கு நிச்சயம் உதவுவேன்," என்று உருக்கமாகப் பேசுகிறார் பழனி.

திண்டுக்கல்லில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வெங்கடேஷ், சாக்கடையைச் சுத்தம் செய்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாரதிகண்ணன் வீதி களில் உள்ள குப்பைகளை அகற்றி மக்களிடம் வாக்கு கேட்டார்.

தமிழ்­நாட்­டில் இம்­மா­தம் 19ஆம் தேதி நகர்ப்­புற உள்­ளாட்சித் தேர்­தல் மாநிலம் முழுவதும் ஒரே கட்ட மாக நடைபெற உள்ளது.

இதையொட்டி, பிப்ரவரி 17 முதல் 19ஆம் தேதி வரையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 22ஆம் ேததி அன்றும் மதுபானம் விற்க தடை விதிக்கப்படுவதாக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இதற்கிடையே, இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மாநிலம் முழுவதும் 57,778 பேர் இறுதிக்கட்ட பட்டியலில் உள்ள தாகவும் 218 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!