சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி நடைப்பயிற்சி சென்ற அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை யும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து முதலில் சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், "விசாரணையில் திருப்தி இல்லை," என்று ராம ஜெயத்தின் மனைவி லதா தாக்கல் ெசய்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது.
இதையடுத்து, இவ்வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்து மூன்று மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், "சிபிஐ விசா ரணையிலும் எந்த ஒரு முன் னேற்றமும் ஏற்பட்டதாக தெரிய வில்லை," எனக் கூறி, வழக்கு விசாரணையை மாநிலக் காவல் துறையே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ராம ஜெயத்தின் மற்றொரு சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் ெசன்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், "கடந்த 10 ஆண்டுகளாக சிபிசிஐடி, சிபிஐ என இரு அமைப்புகளும் அடுத்தடுத்து விசாரணை நடத்தியும் கொலைக்கான நோக்கமும் கொலையாளிகளும் இதுவரை கண்டறியப்படவில்லை என சுட்டிக்காட்டியதோடு, ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வு குழு அமைப்பதாக உத்தரவிட்டார்.
இந்தக் குழுவின் தலைவராக தூத்துக்குடி எஸ்.பி.ஜெயக்குமார், உறுப்பினர்களாக அரியலூர் டிஎஸ்பி மதன், சென்னை சிபிஐ ரவி ஆகியோர் நியமிக்கப்படு கிறார்கள். மேலும், விசாரணையை சிறப்பு புலனாய்வுக் குழுவின் டிஜிபி ஷகீல் அக்தர் கண்காணிக்க வேண்டும்.
வழக்கின் விசாரணையை பிப்ரவரி 21க்குப் பின் தொடங்கினால் நல்லது எனக் கூறிய நீதிபதி, 15 நாள்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

