திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் நடைபெற்ற ஆற்று மணல் கடத்தல் விவகாரம் தொடர்பில் கேரளாவைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் உட்பட ஆறு பாதிரியார்களைச் சிபிசிஐடி காவல்துறையினர் கடந்த 7ஆம் ேததி கைது செய்த நிலையில், நேற்று அவர்களது பிணை மனு தள்ளுபடி ஆனது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நெல்லை குற்றவியல் நீதிமன்றம், அவர்களது பிணை மனுவைத் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், அவர்களில் ஒருவர் கொரோனாவாலும் மற்றொருவர் சிறுநீரகக் கோளாறாலும் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பத்தனம்திட்டா பிஷப் சாமுவேல் மார் இரேனியோஸ், பாதிரியார்கள் ஜார்ஜ் சாமுவேல், ஷாஜி தாமஸ், ஜிஜோ ஜேம்ஸ், ஜோஸ் சாமகலா, ஜோஸ் களவியல் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருநெல்வேலியில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட் டுள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் கிராமத்தில், கேரள மாநிலம், பத்தனம்திட்டா கத்தோலிக்க சபைக்குச் சொந்தமான 300 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்தில், எம் சாண்ட் எனும் செயற்கை மணல் தயாரிப்பதாகக் கூறி, வண்டல் ஓடைகளில் இருந்து ஏறத்தாழ 27,000 கியூபிக் ஆற்று மணல் கடத்தப்பட்டதாக வழக்கு தொடரப் பட்டது.