சென்னை: தமிழகத்தில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் 87% பேருக்கு உருவாகி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் குறித்த நான்கு ஆய்வுகள் இதுவரை நடைபெற்றுள்ளன.
2020 நவம்பா் மாதம் வெளியான முதல் கட்ட ஆய்வில் 32% பேருக்கும் 2021 ஏப்ரல் மாதம் வெளியான இரண்டாம் கட்ட ஆய்வில் 29% பேருக்கும் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியான மூன்றாம் கட்ட ஆய்வில் 70% பேருக்கும் நான்காம் கட்ட ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்ட 87% பேருக்கும் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிா்ப்பாற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 32,245 பேரின் ரத்த மாதிரிகளைச் சேகரித்து, மாநிலப் பொதுச் சுகாதாரத் துறை ஆய்வகங் களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வெளியான முடிவுகளாகும். இதில் தடுப்பூசி செலுத்தியவர் களுக்கு நோய் எதிா்ப்பாற்றல் 90% ஆகவும் தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு நோய் எதிா்ப்பாற்றல் 69% ஆகவும் உள்ளது தெரியவந்துள்ளது.

