புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், பாப்பன்விடுதி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பில் படித்து வந்த மாணவன் நிதிஷ்குமார், தனக்கு உடல்நலமில்லை என்று ஆசிரியரிடம் தெரிவித்துள்ளான்.
ஆசிரியர்கள் நிதிஷ்குமாரின் பெற்றோரைத் தொடர்புகொண்ட போது, தாங்கள் வெளியூரில் இருப்பதாகவும் தனது மகனை வீட்டில் விட்டுவிட்டால் உறவினர்கள் பார்த்துக்ெகாள்வார்கள் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து, நிதிஷ்குமாரின் உடல்நிலை மோசமடைய, உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்தான்.
இந்நிலையில், உறவினர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் மகேஸ்வரியும் வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜும் பணிஇடைநீக்கம் செய்யப்பட்டனர்.
உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சிறுவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்ய நாதன் உறுதி அளித்துள்ளார்.

