தாய்-மகள் இருவரும் போட்டி

தாய்-மகள் இருவரும் போட்டி

1 mins read
094f70db-579a-4470-904d-29d2b25ccece
தாய் சரோஜா, மகள் நித்யா.படம்: தமிழக ஊடகம் -

துறையூர்: திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தலில் தாய்-மகள் இருவரும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை யின்போது 23வது வார்டு அதிமுக வேட்பாளர் சரோஜாவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில், 24வது வார்டு அதிமுக வேட்பாளர் சரஸ்வதியின் மனு நிராகரிக்கப்பட்டது.

இதையடுத்து, இக்கட்சியின் மாற்று வேட்பாளராக மனுத்தாக்கல் செய்திருந்த நித்யா கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரானார். இதன்மூலம், ஒரே வீட்டில் வசிக்கும் தாயும் மகளும் அடுத் தடுத்த வார்டுகளில் கவுன்சில ராகப் போட்டியிடும் அரசியல் விநோதம் நடந்துள்ளது.