சேலம்: கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்குச் சென்ற ரயிலில் உரிய ஆவணங்களின்றி பயணி ஒருவர் எடுத்துச் சென்ற ரூ.2 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்க நகைகளைச் சேலம் ரயில்வே நிலை யத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இந்த நகைகள், சேலம் வருமான வரித்துறை அதிகாரி பிரகாஷிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரயில்களில் சட்டவிரோதமான முறையில் போைதப்பொருட்கள் உள்பட வேறு எந்த ஒரு பொருளும் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தச் சூழலில், சேலம் ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரிகள் கோவையில் இருந்து சென்னைக்கு வந்த 'இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்' ரயிலில் சோதனை செய்தனர்.
அதிகாரிகளைக் கண்டதும் கையில் பையுடன் அந்த ரயிலில் இருந்து வேகமாக இறங்கிய பயணி ஒருவரைப் பிடித்து அதிகாரிகள் சோதித்தனர்.
அப்ேபாது, பையில் கொத்து கொத்தாக நகைகள் இருந்ததைக் கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர்.
விசாரணையில், கோவையில் ஒரு நகைக்கடையில் அழகிரி, 46, வேலை பார்த்து வருவதும் கோவை யில் இருந்து வாணியம்பாடி, திருப்பத்தூர், குடியாத்தம் பகுதி வாடிக்கையாளர்களுக்கு அவற்றை கொடுக்கச் செல்வதாகவும் கூறி னார். ஆனால் அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

