பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து கைதான ஆடவர் வாக்குமூலம்

பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசியது குறித்து கைதான ஆடவர் வாக்குமூலம்

2 mins read
6a8ca043-4bbe-4df9-a6da-a8672903d087
வினோத். படம்: ஊடகம் -

சென்னை: சென்னை, தியா­க­ராய நக­ரில் உள்ள தமி­ழக பாஜக தலைமை அலு­வ­ல­க­மான கம­லா­லயம் மீது ேநற்று அதி­காலை மூன்று மணி அள­வில் பெட்­ரோல் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது.

கட்­ட­டத்­தின் கத­வு­கள் மூடப்­பட்­டி­ருந்­த­தால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்­ப­ட­வில்லை.

இந்­தக் குற்­றச்­செ­ய­லில் ஈடு­பட்ட இரு ஆட­வர்­களில் ரவுடி கர்த்தா வினோத் என்­ப­வர் கைது செய்யப் பட்டார். பாஜக அலு­வ­ல­கம், அத­னைச் சுற்­றி­யுள்ள சாலை­களில் அமைக்­கப்­பட்­டி­ருந்த சிசி­டிவி காட்­சி­களை வைத்து நந்­த­னத்தைச் சேர்ந்த வினோத் கைதானார்.

காவல் துறை அதி­கா­ரி­க­ளின் முதல்­கட்ட விசா­ர­ணை­யில், வினோத் மீது பல குற்­ற­வ­ழக்­கு­கள் உள்­ள­தா­க­வும் மருத்­து­வத் தேர் வுக்­கான நுழை­வுத் தேர்­வாக விளங்­கும் நீட் தேர்­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை பேசி வருவதைக் கண்­டித்­தும் அதற்கு எதிர்ப்பு தெரி­விக்­கும் வகை­யில் பெட்­ரோல் குண்டுகளை வீசி­ய­தா­க­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

பாஜக அலு­வ­ல­கத்­துக்கு வந்­தி­ருந்த கட்­சித் தொண்­டர்­கள் பெட்­ரோல் குண்­டு­களை வீசி­ய­வர்­களை உட­ன­டி­யாக கைது செய்ய வலி­யு­றுத்தி முழக்­கங்­களை எழுப்­பிய நிலை­யில், இந்­தக் கைது நட­வடிக்கை எடுக்­கப்­பட்­டது.

இச்சம்­ப­வம் தொடர்­பாக பாஜக தக­வல் தொழில்­நுட்­பப் பிரி­வுத் தலை­வர் நிர்­மல் குமார் வெளி­யிட்­டுள்ள டுவிட்­டர் பதி­வில், "பாஜக தலை­மை­ய­க­மான கம­லா­ல­யத்­தில் மூன்று பெட்­ரோல் குண்­டு­கள் வீசி தாக்­கு­தல் நடை­பெற்­றுள்­ளன.

"கடந்த 10 ஆண்­டு­களில் இல்­லாத ஒரு தாக்­கு­தல் தற்­போது நடந்­துள்­ளது. தலை­ந­கர் சென்­னை­யில் நடந்­துள்ள இந்த பெட்­ரோல் குண்டு கலா­சா­ரம், சட்­டம் ஒழுங்கு பெரும் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளதை கோடி­காட்­டு­கிறது," எனப் பதி­விட்­டுள்­ளார்.