கணவரை எதிர்க்கும் மனைவி

கணவரை எதிர்க்கும் மனைவி

1 mins read
bdf071d2-185a-4c87-860f-5276fe5e7076
மெய்யர், சாந்தி. படம்: ஊடகம் -

காரைக்­குடி: காரைக்­குடி நக­ராட்சி யில் சுயேச்­சை­யா­கப் போட்­டி­யி­டும் தனது கண­வரை எதிர்த்து நான்­கா­வது முறை­யாக அவ­ரது மனைவியும் போட்­டி­யி­டு­கி­றார்.

காரைக்­குடி நக­ராட்­சி­யில் மெய்­யர் என்­ப­வர் தொடர்ந்து மூன்று முறை­யாக சுயேச்­சை­யா­கப் போட்­டி­யிட்டு வெற்­றி­பெற்­றார். தற்­போது அவர் மீண்­டும் போட்டி யிடும் நிலை­யில், தனது வெற்­றிக்கு ஒற்­றைப்­படை எண்­களை முக்­கிய கார­ண­மா­கவும் அவர் கருதி வரு­கி­றார்.

ஒரு­வேளை, வேட்­பா­ளர்­களின் எண்­ணிக்கை இரட்­டைப்­படை எண்­ணிக்­கை­யில் வந்­தால் ஒரு­வரை மீட்­டுக்­கொள்­ளச் செய்­ வ­தற்­கு (வாபஸ்) தோதாக, தனது மனைவி சாந்­தியை கடந்த மூன்று முறையாக அவர் போட்டியிட வைத்துள்ளார்.