செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a0073257-298a-4e8d-9455-b1585460d548
-

முடிதிருத்தும் கடையில் பாகுபாடு உள்ளதா என பதிலளிக்க உத்தரவு

மதுரை: "புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தில் பட்டியல் இனத்தவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்படுவதில்லை, இங்கு தீண்டாமை பின்பற்றப்படுகிறது, இதைத் தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும்,'' என தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு ஒன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், மனுதாரர் செல்வன் குறிப்பிடுவது உண்மையாக இருப்பின், இது ஒரு மிகப்பெரிய பிரச்சினைதான். தனித்தனி முடி திருத்தும் கடைகள் உள்ளனவா? பாகுபாடு காட்டப்படுகிறதா? என கேள்வி எழுப்பி, மனுவிற்கு மாவட்ட ஆட்சியரை பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.

1,500 அடி பள்ளத்தில் விழுந்த ஆடவரின் உடல் மீட்பு

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வட்டக்கானலில் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை செய்யப்பட்ட செங்குத்து பாறை என்ற பகுதி உள்ளது. இப்பகுதிக்கு மதுரை அண்ணா நகரைச் சேர்ந்த ராம்குமார், 32, என்பவர் தனது நண்பர்களுடன் இம்மாதம் 2ஆம் தேதி மாலை சென்றுள்ளார். அப்போது செங்குத்து பாறையின் நுனி அருகே சென்ற ராம்குமார் செல்ஃபி எடுத்தபோது தவறி விழுந்து மாயமானார். ஏறத்தாழ 1,500 அடி பள்ளத்தில் இருந்து ராம்குமாரின் சிதைந்த உடல் எட்டு நாள்களுக்குப் பிறகு நேற்று மீட்கப்பட்டது.

மதிய உணவில் நவதானியம், கருப்பட்டியை வழங்க யோசனை

புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் மதிய உணவில் நவதானியம், கருப்பட்டியை வழங்க அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் யோசனை கூறியுள்ளார். இங்குள்ள

பள்ளி வகுப்பறைகளைக் கணினி மயமாக்கி 'டிஜிட்டல்' முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வதற்கும் ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.