தலைமை நீதிபதியாக முனீஷ்வா் நாத் பண்டாரி நியமனம்

தலைமை நீதிபதியாக முனீஷ்வா் நாத் பண்டாரி நியமனம்

1 mins read
caf82cf0-bbdf-486c-8123-103270e7f085
-

சென்னை: சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் புதிய தலைமை நீதிபதி­யாக நியமிக்கப்பட்டுள்ள முனீஷ்வா் நாத் பண்­டாரி (படம்) வரும் 22ஆம் பத­வி­யேற்க உள்­ளார்.

முன்­ன­தாக, சென்னை உயர் நீதி­மன்­றத் தலைமை நீதி­ப­தி­யாக இருந்த சஞ்­சீப் பானா்ஜி, கடந்த ஆண்டு நவம்­ப­ரில் மேகா­லயா உயர் நீதி­மன்­றத்­துக்குப் பணி­யி­ட­மாற்­றம் செய்­யப்­பட்­டார்.

அதன்­பி­றகு, முனீஷ்வா் நாத் பண்­டாரி சென்னை உயர் நீதி­மன்­றத்­தின் பொறுப்­புத் தலைமை நீதி­பதி­யாக நிய­மிக்­கப்­பட்டாா்.

இந்­நி­லை­யில், புதிய தலைமை நீதி­ப­தி­யாக அவர் பத­வி­யேற்க உள்­ள­தாக மத்­திய சட்­டத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.