திருச்சி: திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை, போதை ஊசி விநியோகித்து வந்த ஒரு பெரிய கும்பலைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது.
மத்திய பேருந்து நிலையம், திருவரங்கம், பாலக்கரை, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரை, போதை ஊசிகளைப் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, போதைப் பொருள் விநியோகிக்கப்படும் இடங்களுக்கு அதை வாங்குபவர்கள் போல் சென்ற தனிப்படை காவல்துறை அதிகாரிகள், திருவரங்கத்தைச் சேர்ந்த அரவிந்த், காட்டூரைச் சேர்ந்த ெஷப்ரின், கல்லுக்குழி, முடுக்குப்பட்டியைச் சேர்ந்த நாகராஜ், கார்த்திக் ராஜா, ஜெயராமன், கோகுல், பிரவீன் ராஜ் ஆகிய ஏழு பேரைக் கைது செய்துள்ளனர்.
இந்தக் கும்பலிடம் இருந்து 1,450 போதை மாத்திரைகளையும் 80 போதை மருந்து போத்தல்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

