தாய்மை அடைந்த சிறுமி உயிரிழப்பு; கம்பி எண்ணும் காவலர்

தாய்மை அடைந்த சிறுமி உயிரிழப்பு; கம்பி எண்ணும் காவலர்

1 mins read
798be4db-5d98-4cef-b70c-8f9534b1e1da
காவலர் மகேஷ். படம்: ஊடகம் -

சென்னை: ஒரு சிறு­மி­யைத் திரு­மணம் செய்­து­கொள்­வ­தாக ஆசை வார்த்தை கூறி, சொன்­னது போல் நடக்­கா­மல் ஏமாற்­றி­ய­தால் மன­முடைந்த சிறுமி தன்­னைத் தானே மாய்த்­துக்­கொண்­டார். இந்­தக் குற்­றச்­செ­ய­லுக்கு கார­ண­மாக இருந்த காவ­லரை சிபி­சி­ஐடி காவல் துறை அதி­கா­ரி­கள் கைது செய்து சிறை­யில் அடைத்­த­னர்.

தற்­போது, இடை­நீக்­கம் செய்­யப்­பட்­டுள்ள இவரை காவ­லில் எடுத்து விசா­ரிக்க நேற்று எழும்­பூர் நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

சென்னை, மாத­வ­ரம் காவல் நிலை­யத்­தில் காவ­ல­ரா­கப் பணி புரி­ப­வர் மகேஷ், 27. இவர், கடந்த 2020ல் சமூக வலைத்­த­ளம் வழி சென்­னை­யைச் சேர்ந்த 16 வயது சிறு­மி­யு­டன் நட்­பா­கப் பழகி, அவரைத் திரு­ம­ணம் செய்து கொள்­வ­தா­கக் கூறி, இரு­முறை தாய்மை அடைய வைத்து, இரு­மு­றை­யும் கட்­டா­யக் கருக்­க­லைப்பு செய்ய வைத்­துள்­ளார்.

அதன்­பின், சிறு­மி­யு­ட­னான தொடர்­பைத் துண்­டித்­து­விட்­டார்.

இத­னால், மன­வே­தனை அடைந்த சிறுமி தனது உயிரை மாய்த்­துக்­கொண்­டார்.

அதற்­கு­ முன்­ன­தாக, காவ­லர் மகேஷ் தன் வாழ்வை நாச­மாக்கி விட்­ட­தாக 'ஸ்மார்ட் போனில்' காெணாளி­யா­கப் பதிவு செய்து, அதையே தன் வாக்­கு­மூ­ல­மாக எடுத்­துக்­கொள்­ளும்படி அந்தச் சிறுமி கூறியிருந்­தார்.

இந்தப் புகாரை எம்­கேபி நகர் மக­ளிர் காவல்­நி­லை­யத்தினர் முறை­யாக விசா­ரிக்­கா­மல் தற்­கொலை என வழக்­குப் பதிந்­தனர்.

இதை­ய­டுத்து, சிறு­மி­யின் பெற்­றோர் சென்னை உயர் நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்த நிலை­யில், சிபி­சி­ஐடி காவல்­துறை விசா­ர­ணை­யில், மகே­ஷ் தனது குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.