மக்களின் 40 கோடி பணத்தை சுருட்டிய பட்டதாரி ஆடவர்

மக்களின் 40 கோடி பணத்தை சுருட்டிய பட்டதாரி ஆடவர்

2 mins read
2f7e1a43-b752-42e0-9e44-6c87f21a088b
-

சிவ­கங்கை: சிவ­கங்கை மாவட்­டம், காரைக்­குடி அருகே நிதி நிறு­வ­னம் நடத்தி, பொது­மக்­களின் ரூ.40 கோடி பணத்தை மோசடி செய்த வழக்கு தொடர்­பில், பங்­குச் சந்தை தர­க­ரான பொறி­யி­யல், எம்­பிஏ பட்­ட­தா­ரியை காவல்­துறை அதி­கா­ரி­கள் கைது செய்­த­னர்.

காரைக்­குடி டி.டி.நக­ரைச் சேர்ந்­த­வர் சோம கணே­சன், 35. இவர் 'கேப் ஸ்டாக்ஸ்' என்ற நிதி நிறு­வ­னத்தை தொடங்கி பங்­குச் சந்தை தர­க­ராக இருந்து வந்­துள்­ளார்.

இந்­நி­லை­யில், உற­வி­னர்­கள், படித்த நண்­பர்­கள், அக்­கம்­பக்­கத்­தில் வசித்­த­வர்­க­ளி­டம் பங்கு வர்த்­த­கம், 'ரியல் எஸ்­டேட்' தொழி­லில் முத­லீடு செய்­தால் கூடு­தல் லாபம் கிடைக்­கும் எனக் கூறி 61 பேரி­டம் 40 கோடி ரூபாய் அள­வுக்கு சோம­ க­ணே­சன் மோசடி செய்­த­தா­கப் புகார் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில், சோம­ க­ணே­சன் தலை­ம­றை­வா­னார்.

இதற்­கி­டையே தன்­னி­டம் வாங்கிய பணத்தை சோம கணேசன் திருப்­பிக்­கொ­டுக்­கா­மல் ஏமாற்­றி­விட்டு தலை­ம­றை­வாகி விட்டதாக காரைக்­கு­டி­யைச் சேர்ந்த சர­வ­ணன் என்­ப­வர் காரைக்­குடி வடக்கு காவல்­நி­லை­யத்­தில் புகார் அளித்­தார்.

இந்­தப் புகார் தொடர்­பாக அவ­ரது மனைவி வள்­ளி­யம்­மை­யி­டம் விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

அப்­போது தனது கண­வரை பல நாள்க­ளா­கக் காண­வில்லை என்­றும் இது­ தொ­டர்­பாக உயர் நீதி­மன்ற மது­ரைக் கிளை­யில் ஆள்கொ­ணர்வு மனுத்தாக்­கல் செய்து உள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.

மற்­றொ­ரு­பு­றம் காவல்­துறை யின­ரும் தீவி­ர­மா­கத் தேடி வந்த நிலை­யில் நேற்று நீதி­மன்­றத்­தில் சோம­ க­ணே­சன் முன்­னி­லை­யா­னார்.

அதன் ­பி­றகு, நீதி­மன்­றத்­தில் இருந்து வெளியே வந்த சோம கணே­சனை மோசடி வழக்­கில் காரைக்­குடி வடக்கு காவல் துறை­யி­னர் கைதுசெய்து, காரைக்­குடிக்கு அழைத்து வந்து நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்தி சிறை­யில் அடைத்­த­னர்.