களைகட்டும் தேர்தல்: தாரை தப்பட்டை, தலைக்கவசத்துடன் வேட்பாளர்கள்

களைகட்டும் தேர்தல்: தாரை தப்பட்டை, தலைக்கவசத்துடன் வேட்பாளர்கள்

1 mins read
db3f16ea-208e-425e-b7ba-b9752db0881c
-
multi-img1 of 2

உடு­மலை: கொரோனா விவ­கா­ரத்­தால் வரு­வாய் இன்­றித் தவித்து வந்த உடு­ம­லைப் பேட்­டை­யில் உள்ள தாரை, தப்­பட்டை இசைக்­குழுக்­க­ளுக்கு நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் கைகொ­டுத்­துள்­ளது.

உடு­மலை நக­ராட்­சி­யில் போட்டி­யி­டும் வேட்­பா­ளர்­கள் இந்த இசைக்­கு­ழுக்­களை (படம்) பிர­சா­ரத்­தின்­போது உடன் அழைத்­துச் செல்­கி­றார்­கள்.

ஊர­டங்கு காலத்­தில், நிகழ்ச்சி­கள் இல்­லா­மல் முடங்­கி­யி­ருந்த தங்­க­ளுக்கு, தேர்­தல் காலத்து வரு­வாய் சற்று ஆறு­தல் அளித்து வரு­வ­தா­க­வும் ஒவ்­வொரு வேட்­பா­ள­ரும் ஆயி­ரம் முதல் இரண்­டா­யி­ரம் ரூபாய் வரை தரு­வ­தா­க­வும் இசைக் கலை­ஞர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

கோவை மாந­க­ராட்சி, 76வது வார்­டில் பாஜக சார்­பில் போட்­டி­யி­டு­கி­றார் கார்த்­திக். நேற்று முன்­தி­னம் இவர் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டி­ருந்­த­போது அடை­யா­ளம் தெரி­யாத சிலர் கற்­களை வீசி தாக்­கு­தல் நடத்தி உள்­ள­னர். இதை­ய­டுத்து அவர் தலைக்­க­வ­சத்­து­டன் (படம்) பிர­சா­ரம் செய்­கி­றார்.