தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: வரிந்து கட்டும் கட்சிகள்

தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்: வரிந்து கட்டும் கட்சிகள்

2 mins read
dc0f3477-3749-44db-8f79-2d889cf7b1ec
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்க ளின் பெயர்கள், சின்னம் ஆகியவற்றை வாக்குப்பதிவு இயந்திரங்க ளில் பொருத் தும் பணி நடைபெற்று வருகிறது. கோப்புப்படம்: தமிழக ஊடகம் -

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடக்கிறது

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் தீவி­ர­ம­டைந்­துள்­ளன. மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் மாநி­லம் முழு­வ­தும் உள்ள வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு அனுப்பிவைக்­கப்­பட உள்­ளன.

முன்­ன­தாக மின்­னணு வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரத்­தில் வேட்­பா­ளர்­க­ளின் பெயர், சின்­னங்­கள் பொருத்­தும் பணி மாவட்ட நிர்­வா­கத்­தின் மேற்­பார்­வை­யில் நடை­பெற்று வரு­வ­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் தேர்­தல் நடத்­தும் அலு­வ­லர் முன்­னி­லை­யில் இந்­தப் பணி நடை­பெ­றும் என்­றும் தேர்­த­லுக்­கான முன்­னேற்­பா­டு­களை மாவட்ட ஆட்­சி­யர் நேரில் பார்­வை­யி­டு­வார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தப் பணி முடிந்த பின்­னர் வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு அவை அனுப்பிவைக்­கப்­படும்.

தேர்­தல் நாளன்று வாக்­குச்­சா­வ­டி­களில் பயன்­ப­டுத்­தப்­பட உள்ள பொருள்­களை ஆட்­சி­யர் பார்­வை­யி­டு­வார் என்­றும் வாக்­குப்­ப­திவு இயந்­தி­ரங்­கள் வைக்­கப்­படும் அறை­க­ளின் பாது­காப்பு குறித்து அவர் ஆய்வு மேற்­கொள்­வார் என்­றும் மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் கூறி­யுள்­ளது.

பாது­காப்பு அறை­யின் முன் கண்­கா­ணிப்பு கேம­ரா­க்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. வாக்­குப்­ப­திவு மையங்­க­ளுக்கு உள்­ளே­யும் வெளி­யி­லும் பாது­காப்­புக்­காக துப்பாக்கி ஏந்­திய காவல்­து­றை­யினர் நிறுத்­தப்­ப­டு­வார்­கள் என­வும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, வாக்­குச்­சாவடி முக­வர்­கள் தங்­கள் கட்சி சின்­னம், அடை­யா­ளங்­களை வெளிப்­படுத்­தும் வகை­யில் உடை­கள், பொருள்­க­ளைப் பயன்­ப­டுத்­தக் கூடாது என தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக வெளி­யிட்ட அறிக்­கை­யில், முக­வர்­கள் ஒவ்­வொரு வாக்­கா­ள­ரும் யாருக்கு வாக்­க­ளிக்­கின்­ற­னர் என்­பதை நேர­டி­யா­கத் தெரிந்­து­கொள்­வதோ, மறை­மு­க­மாக அறிய முயற்­சிப்­பதோ கூடாது என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

"வாக்­குச்­சா­வடி முக­வர், வேட்­பா­ள­ரின் பெயர், அவ­ரது தேர்­தல் சின்­னம் அடங்­கிய எதை­யும் வைத்துக்­கொண்டு வாக்­குச்­சா­வ­டிக்­குள் பணி­யாற்­றக் கூடாது.

"வாக்­கா­ளர்­களை நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ, சைகை மூல­மா­கவோ அல்­லது சங்கேதக் குறி­கள் மூல­மா­கவோ எந்த ஒரு சின்­னத்­தி­லும் வாக்­க­ளிக்கத் தூண்­டக்­கூ­டாது," என்­றும் மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அறிக்­கை­யில் மேலும் குறிப்­பிட்­டுள்­ளது.