புதுவை: கோவிலுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்த பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் பெண் ஒருவர் பலியானார். மேலும் நால்வர் படுகாயம் அடைந்தனர்.
நேற்று முன்தினம் புதுவை மாநிலம், ஏம்பலம் பகுதியில் இச்சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

