வேட்பாளர்களை திணற வைக்கும் வாக்காளர்கள்

வேட்பாளர்களை திணற வைக்கும் வாக்காளர்கள்

2 mins read
9e93fa11-9e9a-46a4-bc06-b33ae8a56f1f
கோவை மாவட்டம் பேரூர் பேராட்சி 7வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன், வாக்காளர்களுக்கு தாம்பூலத்தட்டில் துண்டுப் பிரசுரங்கள், வெற்றிலை பாக்கு வைத்து, பாரம்பரிய முறைப்படி வாக்கு சேகரிக்கிறார். படம்: ஊடகம் -

அடிப்படை பிரச்சினைகள் குறித்து எழுப்பப்படும் கேள்விகள்

சென்னை: நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்கு இன்­னும் சில தினங்­களே உள்ள நிலை­யில் தமிழ­கம் முழு­வ­தும் தேர்­தல் பிர­சா­ரம் தீவிர­ம­டைந்­துள்­ளது. இந்­நி­லை­யில், வாக்கு கேட்டு வரும் வேட்­பா­ளர்­க­ளி­டம் பொது­மக்­கள் பல்­வேறு கேள்­வி­களை எழுப்பி அவர்­களை திக்­கு­முக்­காட வைப்­ப­தாக தமி­ழக ஊட­கங்­கள் செய்தி வெளி­யிட்டுள்ளன.

திமுக, அதி­முக, பாஜக, காங்­கி­ரஸ் என கட்­சிப் பாகு­பாடு ஏது­மின்றி, சுயேச்­சை­கள் உள்­ளிட்ட அனைத்து வேட்­பா­ளர்­க­ளி­ட­மும் தங்­கள் பகு­தி­யில் உள்ள அடிப்­படைப் பிரச்­சி­னை­க­ளைக் குறிப்­பிட்டு, அவற்­றுக்­கான தீர்வு என்ன என்று பொது­மக்­கள் கேட்­கின்­ற­னர்.

நீண்ட கால­மாக ஒரே பகு­தி­யில் வசித்து வரு­ப­வர்­கள், முந்­தைய தேர்­த­லின்­போது அளிக்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களை ஏன் நிறை­வேற்­ற­வில்லை என்று கார­ணம் கேட்­ப­தால் வேட்­பா­ளர்­கள் பதில் அளிக்க முடியா­மல் தடு­மா­று­கின்­ற­னர்.

சமூக ஊட­கங்­க­ளின் தாக்கம் அதி­க­மாக உள்ள இன்­றைய சூழ­லில், பொது­மக்­க­ளுக்கு அனைத்­து­வி­த­மான தக­வல்­களும் கிடைத்­து­வி­டு­கின்­றன. குறிப்­பிட்ட ஒரு வார்­டில் கடந்த நான்­கைந்து நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல்­க­ளின்­போது, என்­னென்ன பிரச்­சி­னை­கள் நில­வின, அவற்­றுக்குத் தீர்வு காணப்­பட்­ட­னவா இல்­லையா, எந்­தக் கட்­சி­யின் ஆட்­சி­யில் அடிப்­ப­டைத் தேவை­க­ளுக்­கான திட்­டங்­கள் நிறை­வா­கச் செயல்­ப­டுத்­தப்­பட்­டன, உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் யாரே­னும் ஊழல் வழக்­கில் சிக்­கி­யுள்­ள­னரா, தண்­ட­னை பெற்­றுள்­ள­னரா எனப் பல்­வேறு தக­வல்­கள் கிடைக்­கின்­றன.

அவற்றை உறுதி செய்து­கொண்டு வாக்­கா­ளர்­கள் முன்­வைக்­கும் கேள்­வி­க­ளுக்குப் பதி­ல­ளிக்க இய­லா­மல் வேட்­பா­ளர்­கள் தடு­மா­று­வது குறித்து தக­வல் அறி­யும் கட்­சி­க­ளின் மேலி­டப் பிர­மு­கர்­கள், நட்­சத்­தி­ரப் பேச்­சா­ளர்­கள், திரைப்­ப­டக் கலை­ஞர்­களை பிர­சா­ரத்­துக்கு அனுப்பி வைக்­கின்­ற­னர்.

"ஆனால் அவர்­களும் வேட்­பா­ளர்­க­ளைப் போலவே வாக்­கு­றுதி அளிப்­பது, எதிர்த்­த­ரப்­பி­னரை விமர்­சிப்­பது என்று பழைய வழக்­கத்­தையே பின்­பற்­று­வ­தால் வாக்­கா­ளர்­க­ளுக்கு சலிப்பு ஏற்­ப­டு­கிறது.

"மேலும், பொது­வாக நகர்ப்­புற வார்­டு­கள் அனைத்­தி­லுமே சமூக நலச் சங்­கங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன. தங்­கள் பகு­தி­யில் உள்ள அனைத்­துப் பிரச்­சி­னை­கள் குறித்­தும் இச்­சங்­கங்­கள் நட­வ­டிக்கை மேற்­கொள்­வது வழக்­கம்.

"தேர்­த­லில் வாக்கு கேட்டு வரும் அர­சி­யல் கட்­சி­யி­ன­ரி­டம் அந்­தப் பிரச்­சி­னை­கள் குறித்து இச்­சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­கள் அமை­தி­யாக கேள்­வி­களை முன்­வைப்­ப­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன," என்­கி­றார்­கள் அர­சி­யல் கவ­னிப்­பா­ளர்­கள்.

சென்­னை­யில் பெரும்­பா­லா­னோர் மழை, வெள்­ளம் குறித்த கேள்­வி­க­ளையே வேட்­பா­ளர்­க­ளி­டம் கேட்­கி­றார்­கள். மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­களில் மணல் கொள்ளை, குடி­நீர், கழிவு நீர்ப் பிரச்­சினை, லஞ்ச விவ­கா­ரம் குறித்து கேட்­ப­தா­கத் தெரி­கிறது.

புதி­தாக கள­மி­றங்­கும் சுயேச்சை­க­ளுக்கு பிர­சா­ரத்­தின்­போது இத்­த­கைய நெருக்­க­டி­கள் இல்லை. பிற கட்சி வேட்­பாளர்களிடம் பொது­மக்­கள் எழுப்­பும் பிரச்சினை­களுக்­கான தீர்­வையே, தங்­க­ளு­டைய தேர்­தல் வாக்­கு­று­தி­யாக முன்­வைத்து பிர­சா­ரம் மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

சில பகு­தி­களில் மக்­க­ளுக்கு நன்கு அறி­மு­க­மான நலச்­சங்க நிர்­வா­கி­களும் சமூக நல ஆர்­வ­லர்­க­ளுமே தேர்­தல் களத்­தில் குதித்­துள்­ள­னர்.

விஜய் மக்­கள் இயக்­கம் போன்ற சில புதிய அமைப்­பு­கள், நாம் தமி­ழர் கட்சி, மக்­கள் நீதி மய்­யம் ஆகிய கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­களும் நம்­பிக்­கை­யு­டன் போட்­டி­யி­டு­கின்­ற­னர்.