மும்பை: குமரியைச் சேர்ந்த பத்து மீனவர்களை மகாராஷ்டிர மாநில மீன் வளத்துறை அதிகாரிகள் சிறைபிடித்துள்ளதாக வெளியான தகவல் தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில தினங்க ளுக்கு முன்னர் இந்தப் பத்து மீனவர்களும் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக கடலுக்குச் சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அவர்கள் சென்ற விசைப்படகில் கோளாறு ஏற்பட்டது. இதனால் படகை சரியாக இயக்க முடியவில்லை.
அச்சமயம் இவர்களது நிலைகுறித்து அறிந்த கடற்படை நண்பர்கள் சிலர் உதவிக்கரம் நீட்டினர். இதையடுத்து, விசைப்படகில் உடைந்த, பழுதடைந்த பாகத்தை சரிசெய்ய பத்து மீனவர்க ளும் மகாராஷ்டிரா சென்றுள்ளனர். அங்கு உடைந்த பாகத்தை சரிசெய்துவிட்டுத் திரும்பிய போது, எதிர்பாராதவிதமாக அம்மாநில மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழக மீனவர்களின் படகை சிறைபிடித்துள்ளனர்.
அதற்கான காரணம் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
ஏற்கெனவே இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை தொடர்ந்து கைது செய்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பத்து பேர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களின் வேதனை கூடியுள்ளது.

