தேர்வு வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியானது

தேர்வு வினாத்தாள் சமூக ஊடகங்களில் வெளியானது

1 mins read
48f0417f-945e-4625-91f9-d493461bb011
-

சென்னை: பத்து, 12ஆம் வகுப்பு­களுக்­கான தேர்வு வினாத்­தாள் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­னது பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

மாநி­லம் முழு­வ­தும் இவ்­விரு வகுப்­பு­க­ளுக்­கான திருப்­பு­தல் தேர்வு நடை­பெற்று வரு­கிறது. ஆண்டு இறு­தி­யில் நடை­பெ­றும் பொதுத்­தேர்வுக்கு மாண­வர்­களைத் தயார்ப்­படுத்த இந்­தத் தேர்வு உதவும்.

அத­னால் பொதுத்­தேர்­வுக்கு அளிக்­கப்­படும் அதே முக்­கி­யத்­து­வம் இந்­தத் திருப்­பு­தல் தேர்­வுக்­கும் அளிக்­கப்­ப­டு­வது வழக்­கம்.

கொரோனா நெருக்­கடி கார­ண­மாக கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக தமி­ழ­கத்­தில் பள்­ளித் தேர்­வு­களை தொடர்ச்­சி­யாக நடத்த முடி­ய­வில்லை. இந்­நி­லை­யில், தொற்­றுப் பாதிப்பு குறைந்­தி­ருப்­ப­தால், திருப்­பு­தல் தேர்­வு நடைபெறுகிறது.

மாநில அள­வில் ஒரே மாதிரி­யான வினாத்­தாள் தயா­ரிக்­கப்­பட்டு அனைத்துப் பள்­ளி­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டன. இதை­யடுத்து கடந்த 9ஆம் தேதி முதல் தேர்­வு­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், 12ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்­கான வேதி­யி­யல் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடை­பெற்­றது. ஆனால் அதற்கு முந்­திய நாளே அத்­தேர்­வுக்­கான வினாத்­தாள் சமூக ஊட­கங்­களில் வெளி­யா­னது தெரி­ய­வந்­துள்­ளது.

13ஆம் தேதி நடைபெற்ற தேர்வுக் குரிய வினாத்தாளும் இவ்வாறு முதல் நாள் இரவே வெளியானதாகக் கூறப்படுகிறது.

இத­னால் கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் கடும் அதிர்ச்சி அடைந்­துள்ளனர். இது­கு­றித்து தீவிர விசாரணை நடந்து வரு­கிறது.