வாட்டிய ஏழ்மை: நடிகையின் தம்பி மனைவி விபரீத முடிவு

வாட்டிய ஏழ்மை: நடிகையின் தம்பி மனைவி விபரீத முடிவு

2 mins read
90673da1-66d4-495a-9e6f-03d680d680c2
-

விழுப்புரம்: பிர­பல திரைப்­பட நடிகை ஊர்­வ­சி­யின் இளைய சகோ­த­ர­ரின் மனைவி வறுமை கார­ண­மாக உயிரை மாய்த்­துக்கொண்­டுள்­ளார்.

விழுப்­பு­ரத்­தைச் சேர்ந்­த­ 54 வய­தான சுசீந்­தி­ரன் திரு­மணம் செய்­யா­மல் வாழ்ந்து வந்­தார். இவ­ரது தங்கை பிர­மி­ளா­வின் கண­வர் கமல், நடிகை ஊர்­வ­சி­யின் சகோ­த­ரர் ஆவார்.

கம­லுக்­கும் அவ­ரது மனைவி பிர­மி­ளா­வுக்­கும் இடை­யே­யான கருத்து வேறு­பாடு கார­ண­மாக இரு­வ­ரும் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்பு பிரிந்­து­விட்­ட­னர். இத­னால் தன் அண்­ணன் வீட்­டுக்கு வந்­து­விட்­டார் பிர­மிளா.

இரு­வ­ருக்­குமே நிரந்­தர வேலை என்று எது­வும் இல்லை. மேலும் வேறு வகை­யான வரு­மா­ன­மும் இல்­லா­த­தால் வறு­மை­யில் வாடி­ய­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் இரு­வ­ரும் வசித்து வந்த வீட்­டில் இருந்து கடும் துர்­நாற்­றம் வீசி­ய­தால் அண்டை வீட்­டார் சந்­தே­க­ம­டைந்து காவல்­து­றைக்­குத் தக­வல் தெரி­வித்­த­னர்.

அவர்­கள் வந்து வீட்­டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த­போது, பிர­மி­ளா­வும் அவ­ரது அண்­ணன் சுசீந்­தி­ர­னும் வெவ்­வேறு அறை­களில் தூக்­கிட்டு உயிரை மாய்த்­துக்­கொண்­டது தெரி­ய­வந்­தது.

காவல்­து­றை­யி­னர் வீட்­டில் சோதனை நடத்­தி­ய­தில் இரு­வ­ரும் எழுதி வைத்­தி­ருந்த உருக்­க­மான கடி­தம் சிக்­கி­யது.

ஏழ்மை, உடல்­நிலை சரி­யில்­லா­தது உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் தங்­கள் உயிரை மாய்த்­துக்கொள்­வ­தா­க­வும் வீட்டு வாட­கை­யைக் கூட செலுத்த இய­லா­மல் தவித்­த­தா­க­வும் இரு­வ­ரும் குறிப்­பிட்­டுள்­ள­னர்.

தங்­க­ளின் இந்த முடி­வுக்கு வேறு யாரும் கார­ண­மல்ல என்­றும் வீட்­டில் உள்ள பொருள்­களை விற்று வீட்டு உரி­மை­யா­ள­ரி­டம் வழங்­கு­மா­றும் அந்­தக் கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

நடிகை ஊர்­வ­சி­யின் சகோதரி­யும் நடி­கை­யு­மான கல்­பனா முன்பு பிர­மி­ளா­வுக்கு பண உதவி செய்து வந்­துள்­ளார். எனி­னும் கல்­பனா இறந்­த­பி­றகு வேறு யாரி­டம் இருந்­தும் பிர­மி­ளா­வுக்கு எந்­த­வித உத­வி­யும் கிடைக்­க­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.