'வாக்குக்கு பணம் வேண்டாம்'

'வாக்குக்கு பணம் வேண்டாம்'

1 mins read
d6d0880e-2b4c-476b-a1e4-c758c5752a6f
தங்கள் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பணம் வேண்டாம் என்பதை உணர்த்தும் வகையில் தங்கள் வீட்டின் முன்புறம் மெழுகுவத்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்ட பெரு­மாள்­பு­ரம் பகுதி குடியிருப்பாளர்கள். படம்: தமிழக ஊடகம் -

திரு­நெல்­வேலி: நெல்லை பெரு­மாள்­பு­ரம் பகு­தி­யில் வசிக்­கும் 100க்கும் மேற்­பட்ட குடும்­பத்­தைச் சேர்ந்த பெண்­கள் வாக்­க­ளிக்க பணம் வாங்­கமாட்டோம் என உறுதியாக உள்ளனர். இது­கு­றித்து அவர்­கள் கூறு­கை­யில், "வாக்­குக்­குப் பணம் வாங்­கி­னால் வெற்­றி­பெ­றும் வேட்­பா­ளர்­கள் நல்­லது செய்­ய­மாட்­டார்­கள். மக்­க­ளுக்கு சேவை செய்­யும் நல்ல வேட்­பா­ளர்­க­ளையே நாங்­கள் தேர்வு செய்­வோம்," என்­ற­னர்.

இதே­போல், செங்­கல்­பட்டு மாவட்­டம், இடைக்­க­ழி­நாடு பேரூ­ராட்­சி­யில் உள்ள ஆனி­யன் தோட்­டப் பகுதி மக்­களும் எந்த ஒரு தேர்­தல் என்­றா­லும் வாக்­குக்­காக இவர்­கள் பரி­சோ, பணமோ வாங்­கு­வது இல்லை. ஆகவே, யாரும் பணம், இல­வசப் பொருள்களுடன் கிரா­மத்­துக்­குள் வர­வேண்­டாம். வாக்­கு­ரிமை என்­பது எங்­கள் உரிமை. நாங்­கள் சுதந்­தி­ர­மாக, பிடித்தவர்­களுக்கு வாக்கு அளிப்­போம் என்று கூறி­யுள்­ள­னர்.