கலைஞர்கள் குத்தாட்டம்; பணப்பட்டுவாடா; பரிசுப்பொருள்கள் விநியோகம் தீவிரம் இறுதிக்கட்டத்தில் பிரசாரம்

கலைஞர்கள் குத்தாட்டம்; பணப்பட்டுவாடா; பரிசுப்பொருள்கள் விநியோகம் தீவிரம் இறுதிக்கட்டத்தில் பிரசாரம்

2 mins read
fd88bdbc-9d98-4558-a5a1-e1092f5b7215
குன்றத்தூரில் காந்தி, அம்பேத்கர், கருணாநிதி போல் வேடமிட்டு, மேளவாத்தியங்கள் முழங்க தொண்டர்களுடன் ஊர்வலமாகச் ெசன்று காங்கிரஸ் பெண் வேட்பாளர் மெர்ஸி எஸ்தர் ராணி வாக்குச் சேகரித்தார். இவரை ஆதரித்து திருப்பெரும்புதூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் செல்வப்பெருந்தகை பிரசாரம் செய்தார்.படம்: ஊடகம் -

கோவை: தமி­ழ­கத்­தில் நாளை மாலை 6 மணி­யு­டன் நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­தல் பிர­சா­ரம் நிறைவு­பெ­ற உள்ளதாக மாநி­லத் தேர்­தல் ஆணை­யம் அறி­வித்­துள்­ளது.

இத­னால், பிர­சா­ரம் செய்­வ­தற்கு இன்­னும் சில மணி நேரங்­களே எஞ்­சி­யி­ருப்­ப­தால், இறு­திக்­கட்­டப் பிர­சா­ரப் பணி­களில் வேட்­பா­ளர்­கள் தீவிரம் காட்டி வரு­கின்­ற­னர்.

கோவையில் பிர­சா­ரம் செய்த முன்­னாள் முதல்­வரும் எதிர்க்கட்சித் தலைவருமான பழ­னி­சாமி, "தமி­ழ­கத்­தில் பொரு­ளா­தா­ரம் பின்­தங்­கி­யுள்­ளது. 70% வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றி­ய­தாக ஸ்டா­லி­னும் 90% வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றி­ய­தாக உத­ய­நி­தி­யும் மாறி மாறி பொய்ப் பிர­சா­ரம் ெசய்து வரு­கின்­ற­னர். திமுக ஒரு வர்த்­தக நிறு­வ­ன­மாக மாறி­விட்­டது," என கடு­மை­யா­கக் குற்றம்சாட்டினார்.

அதே­போல், "எல்­லோ­ருக்­கும் விடி­யல் தரும் ஆட்சி திமுகதான் என்­றும் மிசாைவயே பார்த்த என்னை பழ­னி­சாமி மிரட்டமுடி­யாது," என்­றும் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் காெணாளி பிரசாரம் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

"2024ல் ஒரே நாடு ஒரே தேர்­தல் வரும் என பழ­னி­சாமி ஆரு­டம் சொல்­கி­றார். கற்­ப­னை­க் கோட்டை கட்­டிக்கொண்டு பாஜ­க­விற்கு 'டப்­பிங்' பேசி வரு­கி­றார். இத்தேர்தலோடு அதிமுகவிற்கு முற்­றுப்­புள்ளி வைக்­கப்­படும்," என்றார்.

"தமி­ழ­கத்­தில் மது­வி­லக்கு குறித்து திமுக-அதி­முக விவா­தத்­திற்கு தயாரா?" என பாமக இளை­ஞ­ரணி தலை­வர் அன்­பு­மணி ராம­தாஸ் சவால் விடுத்­துள்­ளார்.

"50 ஆண்­டு­க­ளாக திமுக-அதி­முக கட்­சி­கள் வாக்­கு­று­தி­களைக் கொடுத்­து­விட்டு உருப்படியாக எதையும் நிறை­வேற்­ற­வில்லை," என தேமு­திக பொரு­ளா­ளர் பிரே­ம­லதா விஜ­ய­காந்த் குற்­றச்­சாட்டி உள்­ளார்.

"அதி­மு­க­வி­னர் கொடுத்­துப் பழக்­கப்­பட்­ட­வர்­கள், திமு­க­வி­னர் எடுத்­துப் பழக்­கப்­பட்­ட­வர்­கள்," என்று நாகர்­கோ­வி­ல் பிர­சா­ரத்தில் அதி­முக ஒருங்­கி­ணைப்­பா­ளர் ஓ பன்­னீர்­செல்­வம் பேசி­யுள்­ளார்.

மக்­க­ளின் கேள்­வி­க­ளுக்­குப் பயந்தே நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லில் முதல்­வர் நேரில் பிர­சா­ரம் செய்யாமல் காணொளி வழி பிர­சா­ரம் செய்து வரு­கி­றார் என தமி­ழக பாஜக தலை­வர் அண்­ணா­மலை குறை கூறி­யுள்­ளார்.

இதற்­கிடையே, தூத்­துக்­கு­டி­யில் நடந்த அதிமுக பிர­சா­ரக் கூட்­டத்­தில் சொப்­பன சுந்­தரி, வாயா­சாமி பாடல்­க­ளுக்கு நட­னக்­க­லை­ஞர்­கள் குத்தாட்டம் போட்டுள்ளனர்.

தேர்தலில் வெற்­றிக் கனியைப் பறிக்க சுயேச்சை வேட்­பா­ளர்­கள் ரூ.2,000 வரை­யும் அர­சி­யல் கட்சி வேட்­பா­ளர்­கள் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரையும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில இடங்­களில் மூக்­குத்தி, குக்­கர், அரிசி மூட்டை, புடவை, மளிகைப் பொருள்கள் என வித­வி­த­மான பரிசுகள் வாக்­கா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்றன.