முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 35 பேர் கைது

முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 35 பேர் கைது

1 mins read
e2c54e7b-3926-4739-a0fe-0e41bf2c317f
-

சென்னை: தஞ்­சா­வூர் மாணவி லாவண்யா மர­ணத்­திற்கு நீதி கோரி ஆழ்­வார்­பேட்டை சித்­த­ரஞ்­சன் சாலை­யில் உள்ள முதல்­வர் மு.க. ஸ்டா­லின் வீட்டை முற்­று­கை­யிட்­டுப் போராட்­டம் நடத்த முயன்ற 35 பேரை வரும் பிப்­ர­வரி 28ஆம் தேதி­வரை நீதி­மன்­றக் காவ­லில் அடைக்க சைதாப்­பேட்டை நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.

ஏபி­விபி அமைப்பு, ஆர்­எஸ்­எஸ் அமைப்­பின் மாணவ அமைப்­பா­கும். இந்த அமைப்­பைச் சேர்ந்­த­வர்­கள், மாண­வர்­கள் உள்­பட 35 பேர் முதல்­வ­ரின் வீட்டை முற்­று­கை­யிட்டு ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட முயன்­ற­னர்.

அப்­போது தங்­க­ளது எச்­ச­ரிக்­கை­யை­யும் மீறி செயல்­பட்ட அனை­வ­ரை­யும் காவல்­து­றை­யி­னர் கைது செய்து சமு­தாய நலக் கூடத்­தில் அடைத்­த­னர்.

இத­னை­ய­டுத்து, சைதாப்­பேட்டை நீதி­மன்­றத்­தில் அவர்­கள் முன்­னி­லைப்­ ப­டுத்­தப்­பட்­ட­னர்.

தேர்­தல் விதி­முறை நடப்பில் இருப்­ப­தால் ஆர்ப்­பாட்­டத்­திற்கு அனு­மதி இல்­லாத சூழ­லில், முதல்­வர் இல்­லத்தை முற்­று­கை­யி­டு­வது மாண­வர்­களே என்­றா­லும் குற்­றம் என கூறிய நீதிமன்றம், வரும் 28ஆம் தேதிவரை அவர்­களை காவ­லில் அடைக்க உத்­த­ர­விட்டது.