20,000 பள்ளிகளில் இன்று முதல் மழலையர் வகுப்புகள்

20,000 பள்ளிகளில் இன்று முதல் மழலையர் வகுப்புகள்

1 mins read
49ee0a90-29a3-4b7f-9c66-1f4c48c4f411
-

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 16ஆம் தேதி முதல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மழலையர், பாலர் வகுப்புகள் திறக்கப்படுகின்றன. இணையம் வழி கல்வி கற்று வந்த குழந்தைகள் இன்று முதல் நேரடி வகுப்புகளுக்கு செல்வதால் பெற்றோரும் குழந்தைகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தனியார் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறுகையில், மாணவர்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகளை நடத்துவோம் என்றார்.