முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்கு

1 mins read
d3ae7b05-f291-499c-940f-f30fbadcf1b2
-

விழுப்புரம்: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவதூறாகப் பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

நேற்று முன்தினம் விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சி.வி.சண்முகம்.

அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர், சி.வி.சண்முகம் பேச்சை நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தார்.

இதனால் ஆவேசம் அடைந்த சி.வி.சண்முகம், குரல் எழுப்பியவரை ஒருமையில் ஏசியதுடன், 'காவல்துறை இப்போது ஏவல்துறையாக மாறி விட்டது' என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், காவல்துறை குறித்து அவர் அவதூறாகப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதை யடுத்து, அவர் மீது பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தியதாகவும் அவதூறாகப் பேசியதாகவும் வழக்குப் பதிவாகி உள்ளது.