ஜெயலலிதா இல்லம்: தமிழக அரசு புது முடிவு

ஜெயலலிதா இல்லம்: தமிழக அரசு புது முடிவு

1 mins read
00848b00-df9b-4cdc-ab1b-420d2cb41669
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த வேதா இல்லம்.கோப்புப் படம்: ஊடகம் -

சென்னை: ஜெய­ல­லி­தா­வின் இல்லத்தை கைய­கப்­ப­டுத்­தும் நட­வடிக்­கையை கைவி­டு­வ­தாக தமி­ழக அரசு நீதி­மன்­றத்­தில் தெரி­வித்தது.

கடந்த அதி­முக ஆட்­சிக் காலத்­தில் சென்­னை­யில் ஜெய­ல­லிதா வாழ்ந்த வீட்டை நினைவு இல்­ல­மாக மாற்றி அரசு உத்­த­ரவிட்டது. மேலும், வீட்­டுக்­கான இழப்­பீட்­டுத் தொகை­யாக சென்னை நீதி­மன்­றத்­தில் ரூ.68 கோடி செலுத்தி இருந்­தது.

எனி­னும் அர­சின் இந்த முடிவை ஜெய­ல­லி­தா­வின் சட்­ட­பூர்வ வாரிசு­களான தீபக், தீபா ஆகிய இரு­வரும் எதிர்த்­த­னர். இத­னால் அரசு பிறப்­பித்த உத்­த­ர­வு­களை உயர் நீதி­மன்­றம் ரத்து செய்­தது.

இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தை அணுகினார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை விலைக்கு வாங்க ஏதுவாக செலுத்தப்பட்ட ரூ.68 கோடி தொகையை திரும்பப் பெறுவதாகவும் கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிடுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.