இறுகும் பிடி: ராஜேந்திர பாலாஜியிடம் மீண்டும் தீவிர விசாரணை

இறுகும் பிடி: ராஜேந்திர பாலாஜியிடம் மீண்டும் தீவிர விசாரணை

1 mins read
6fba8e49-d619-4b8c-bc4c-dd84f19d8398
கர்நாடக மாநில எல்லையில் கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜி பின்னர் தமிழகம் அழைத்துவரப்பட்டார். கோப்புப் படம்: ஊடகம் -

விரு­து­ந­கர்: பண மோசடி வழக்­கில் சிக்­கி­யுள்ள முன்­னாள் அமைச்­சர் ராஜேந்­திர பாலா­ஜி­யி­டம் காவல்­துறை மீண்­டும் விசா­ரணை நடத்­தி­யுள்­ளது. இதை­ய­டுத்து, அவர் மீதான பிடி இறுகி வரு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அரசுப் பணி வாங்­கித் தரு­வ­தா­கக் கூறி, மூன்று கோடி ரூபாய் பெற்­றுக்­கொண்டு மோசடி செய்­த­தாக ராஜேந்­திர பாலாஜி மீது வழக்கு பதி­வாகி உள்­ளது.

இதை­ய­டுத்து தலை­ம­றை­வான அவர், பின்­னர் நீதி­மன்­றத்தை அணுகி பிணை பெற்­றுள்­ளார். கடந்த 12ஆம் தேதி விரு­து­ந­கர் குற்­றப்­பி­ரிவு காவல்­துறை அதி­கா­ரி­கள் அவ­ரி­டம் சுமார் 11 மணி நேரம் விசா­ரணை நடத்­தி­னர்.

அப்­போது 134 கேள்­வி­கள் அவ­ரி­டம் கேட்­கப்­பட்­ட­தா­க­வும் அதன் மூலம் அவ­ரது சொத்து விவ­ரங்கள், நெருக்­க­மான வட்­டத்­தில் இருப்­ப­வர்­கள் குறித்த விவ­ரங்­கள் சேகரிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரி­கிறது.

எனினும், 40 கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ராஜேந்திர பாலாஜியிடம் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது.

இம்­மு­றை­யும் பல மணி நேரம் நீடித்த விசா­ர­ணை­யின்­போது, பல்­வேறு கிடுக்­கிப்­பி­டி கேள்­வி­கள் கேட்­கப்­பட்­டன என்­றும் அதற்கு அவர் அளித்த பதில்­கள் அனைத்­தும் ஆவ­ண­மா­கப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன என்­றும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அடுத்­த­டுத்து நடத்­தப்­பட்­டுள்ள விசா­ர­ணை­கள் கார­ண­மாக ராஜேந்­திர பாலாஜி மீதான காவல்­து­றை­யின் பிடி மேலும் இறுகி உள்­ள­தா­க­க் கூறப்படுகிறது.

மேலும் இவ்­வ­ழக்­கில் காவல்­துறை விரை­வில் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கையை எடுக்க வாய்ப்புள்ளதா­க­வும் தமிழக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.