தொற்று குறைவதால் அலட்சியம் கூடாது: சுகாதாரத்துறைச் செயலாளர் அறிவுறுத்து

சென்னை: அர­சின் வழி­காட்டு நெறி­மு­றை­க­ளைப் பொது­மக்­கள் தொடர்ந்து பின்­பற்­றி­ய­தால் தமி­ழ­கத்­தில் கொரோ­னா ­தொற்­றுப் பர­வல் குறைந்­துள்­ள­தாக சுகா­தா­ரத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன் தெரி­வித்­துள்­ளார்.

வரும் நாள்­களில் மேலும் சில தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட வாய்ப்­புள்ள நிலை­யில், மக்­கள் அலட்சி­ய­மாக இருந்­து­வி­டக் கூடாது என அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

"மாநி­லம் முழு­வ­தும் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு என மருத்­து­வ­ம­னை­களில் சுமார் 130,000 படுக்­கை­கள் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. எனி­னும் அவற்­றில் 2,800 படுக்­கை­கள் மட்­டுமே பயன்­பாட்­டில் உள்­ளன.

"மேலும். தீவிர சிகிச்சைப் பிரி­வில் இருப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை­யும் 440ஆகக் குறைந்­துள்­ளது. எனவே கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­ப­ட­லாம். அதன் பிற­கும் சில மாதங்­க­ளுக்கு அர­சின் நிலை­யான வழி­காட்டு நெறி­மு­றை­களை பொது­மக்­கள் கட்­டா­யம் கடைப்­பிடிக்க வேண்­டும்," என்று ராதா­கிருஷ்ணன் கூறி­யுள்­ளார்.

தமி­ழ­கத்­தில் இன்­னும் 11.3 மில்­லி­யன் பேர் இரண்­டா­வது தடுப்பூசி போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றும் 18 வய­துக்கு மேற்­பட்ட 4 மில்லி­யனுக்­கும் அதி­க­மா­னோர் இன்­னும் முதல் தடுப்­பூ­சி­கூட போட்­டுக்­கொள்­ள­வில்லை என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் நேற்று முன்­தி­னம் புதி­தாக 1,325 பேருக்கு கிருமி தொற்­றி­யது உறுதி­யா­னது. மேலும் 14 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!