தமிழ்நாட்டில் கொவிட்-19 தொற்று குறைந்துள்ளதை அடுத்து, சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில் சென்னை விமான நிலையத்தில் தினமும் 180 உள்நாட்டு விமானச் சேவைகள் இயங்கின.
சுமார் 34,000க்கும் அதிகமானோர் பயணம் செய்தனர்.
ஆனால் ஓமிக்ரான் பரவல் அதிகமானதால் ஜனவரியில் பயணிகள் எண்ணிக்கை 10,000க்குக் குறைந்தது. சுமார் 100 விமானச் சேவைகள் மட்டுமே செயல்பட்டன.
இவ்வேளையில், அரசாங்கம் தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியுள்ளது.
விமானச் சேவைகளும் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டது.

