மதுரை: அடுத்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் மதுரைக்கும் திருப்பதிக்கும் இடையே வாரந்தோறும் நான்கு முறை (ஞாயிறு, திங்கள், புதன், வெள்ளி) விமானச் சேவைகளை வழங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மதுரையில் இருந்து மாலை 3:40 மணிக்கு கிளம்பும் விமானம் 5:00 மணிக்கு திருப்பதி சென்றடையும் என்றும் மறுமார்க்கமாக திருப்பதியில் இருந்து மாலை 5:20 மணிக்கு கிளம்பி 7:00 மணிக்கு மதுரை வந்து சேரும் என்றும் இதற்கான நேர அட்டவணையையும் இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

