வேலூர்: திமுகவினர் உயிருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதால், வேலூர் மாநகராட்சியில் 11வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சுகேந்திரன் காணாமல் போய்விட்டார். கடத்தப்பட்டுள்ள அவரைக் கண்டுபிடித்து தரும்படி அதிமுகவினர் புகார் அளித்த நிலையில், தான் மருத்துவமனையில் இருக்கும் காணொளியை வெளியிட்டுள்ளார் சுகேந்திரன்.
அதில், "திடீரென 17ஆம் தேதி இரவு எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எனது மனைவி, மாப்பிள்ளை உடனடியாக விடியற்காலை 4.30 மணிக்கு என்னை பெங்களூருக்கு அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இப்போது நன்றாக உள்ளேன். என்னை யாரும் கடத்தவில்லை. உடல் சுமாராக உள்ளது. யாரும் பயப்பட வேண்டாம்," என்று கூறியுள்ளார்.

