சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கிராமத்தில், எட்டாம் கட்ட அகழாய்வுப் பணிகளைக் கடந்த 11ஆம் தேதி முதல் வர் மு.க.ஸ்டாலின் காணொளி வழி தொடங்கி வைத்தார்.
அகழாய்வுப் பணிகள் நிறைவடையும்போது கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைப்ப தற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ள நிலையில், புதிதாக இப்ேபாது தந்தத்தால் செய்யப்பட்ட செவ்வக வடிவிலான பகடைக்காய் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது டுவிட்டர் பதிவில், "கீழடி யில் குழிதோண்டும் பணியின்போது செவ்வக வடிவிலான பகடைக்காய் கிடைத்துள்ளது.
"இதுவரை கனசதுர வடிவில் மட்டுமே பொருள்கள் கிடைத்துவந்த நிலையில், தற்போது செவ்வக வடிவில் தந்தத்தில் பகடைக்காய் கிடைத்துள்ளது," என பகிர்ந்துள்ளார்.

