ரவுடி சங்கரின் ரூ.25 கோடி சொத்துகள் முடக்கம்

காஞ்­சி­பு­ரம்: காஞ்­சி­பு­ரத்­தைச் சேர்ந்த ரவுடி சங்­க­ரின் ரூ.25 கோடி மதிப்­பிலான சொத்­து­களை சென்னை அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் முடக்கி உள்­ள­னர்.

காஞ்­சி­பு­ரத்­தைச் சேர்ந்­த­வர் பிபி­ஜிடி சங்­கர். இவ­ருக்கு எதி ராக கொலை, கொள்ளை, மிரட்டி பணம் பறித்­தல் உள்­பட 15 வழக்­கு­கள் நிலு­வை­யில் உள்­ளன. இந்­நி­லை­யில், அவர் தொழி லதி­பர்­க­ளைத் தொடர்ந்து மிரட்டி பணம் பறித்து வரு­வ­தாக புகார் எழுந்­தது.

இதை­ய­டுத்து அவ­ரைப் பிடிக்க தனிப்­படை காவல்துறை­யி­னர் களம் இறங்­கி­யதை அடுத்து, நேற்று முன்­தி­னம் துப்­பாக்கி முனை­யில் கைதானார். அவ­ரி­ட­மி­ருந்து பட்­டாக்­கத்தி ஒன்­றும் பறி­மு­தல் செய்­யப்­பட்­டது.

இதைத்­தொ­டர்ந்து நீதி­மன்­றத்­தில் முன்னிலைப்­ப­டுத்­தப்­பட்ட சங்கர், புழல் மத்­திய சிறை­யில் அடைக்­கப்­பட்டார்.

இந்­நி­லை­யில், சங்­க­ருக்குச் சொந்­த­மான ரூ.25 கோடி சொத்து களை அம­லாக்­கத்­துறை முடக்­கி­யது. சென்னை புற­ந­கர் பகு­தி­களில் உள்ள ரவுடி சங்­கர் மற்­றும் அவ­ரது பினா­மி­க­ளின் 79 சொத்­துகள் முடக்­கப்­பட்­டுள்­ளன.

சட்­ட­வி­ரோதப் பண பரி­வர்த்­தனை வழக்­கில் ரவுடி சங்­க­ரின் சொத்­து­களை முடக்க அம­லாக்­கத்­துறை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. இத்­த­க­வலை சென்னை அம­லாக்­கத்­துறை உதவி இயக்­கு­நர் ஏ.சந்­தி­ர­சே­க­ரன் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!