தாயைக் கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

தாயைக் கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை

1 mins read
64d9df7d-ec56-4e40-87d3-27f7fb84364e
-

பண்ருட்டி: சொத்துக்காக தாயை வெடிகுண்டு வைத்து கொலை செய்த மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், அரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள், 74. இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சில ஆண்டு களுக்கு முன்பே இறந்துவிட மகன்கள், மகளுக்குத் திருமணம் செய்து வைத்து சொத்துகளை எழுதி வைத்தார். ஆனால், தன்னை கவனிக்காத இளைய மகன் செல்வகுமாருக்கு அவர் ஒன்றும் செய்யாததால் ஆத்திரமடைந்த செல்வகுமார் தாயைப் பெட்டி வெடிகுண்டு வைத்துக் கொன்றுள்ளார்.