திருப்பதி: சென்னை பக்தை ஒருவர் திருப்பதி பெருமாளுக்கு ரூ.9.2 கோடி சொத்துகளை உயில் எழுதி வைத்துள்ளார். அந்தப் பத்திரம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
சென்னையைச் சேர்ந்த கல்லுாரி பேராசிரியை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்த ரூ.9.2 கோடி மதிப்புள்ள சொத்துகளை நேற்று அவரது அக்கா டாக்டர் ரேவதி ஒப்படைத்தார்.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் பர்வதம். இவர், கல்லுாரி பேராசிரியையாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை.
ஏழுமலையானின் தீவிர பக்தையான இவர், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏராளமாக நன்கொடை வழங்கியுள்ளார். இவர் தன் 76வது வயதில் கடந்த ஆண்டு மே மாதம் காலமானார்.
இவருக்கு சென்னையில் உள்ள வீடுகளின் மதிப்பு ரூ.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர், தனது இரு வீடுகள், நகைகள், வங்கியில் வைத்துள்ள பணம் ஆகியவற்றை தன்னுடைய மறைவுக்குப் பிறகு திருப்பதி ஆலயத்திடம் ஒப்படைக் கும்படி தனது அக்கா ரேவதி விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கி யிருந்தார். மேலும், அந்த இடத்தில் குழந்தைகளுக்கான சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை கட்ட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், பர்வதத்தின் சகோதரி டாக்டர் ரேவதி விஸ்வநாத் நேற்று தன் குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்து, ஆலய அறங்காவலர் குழுவினரிடம் சொத்துப் பத்திரங்கள், நகைகள், பணம் ஆகியவற்றை ஒப்படைத்தார்.