சென்னை: திருப்பெரும்புதூர், வரதராஜபுரம் பகுதியில் வீட்டு மனைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க ரூ.18,000 பணத்தை 'கூகல் பே' வழி லஞ்சமாகப் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். அத்துடன், இவரது அலுவலக உதவியாளர் சுரேஷ் என்பவரும் கைதானார்.
காஞ்சிபுரம் மாவட்டம், வரத ராஜபுரம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வரு கிறார் பாபு. இதே பகுதியில் வசிக்கும் வீட்டு உரிமையாளர் ஒருவர், தனது வீட்டு மனைக்கு தடையில்லா சான்று வழங்கும்படி பாபுவை அணுகியபோது அவர் சுரேஷிடம் பேசுமாறு கூறியுள்ளார்.
சுரேஷ் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். அதனை 'கூகல் பே'யில் செலுத்துமாறும் அறி வுறுத்தியுள்ளார். இந்த ஆவணம் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவல கத்திற்குப் புகாராக அனுப்பப் பட்டதை அடுத்து இருவரும் கைதாகினர்.

