நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான போலிசார் குவிப்பு இன்று வாக்குப்பதிவு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான போலிசார் குவிப்பு இன்று வாக்குப்பதிவு

2 mins read
f4198977-4dd1-4d2e-a6f7-89313b53b5c5
உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று காலை தரையில் அமர்ந்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் 50 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவினருக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகமும் அதிகாரிகளும் செயல்படுவதாகவும் வீடுவீடாகச் சென்று வாக்காளர் களுக்கு கொலுசு, 'ஹாட் பாக்ஸ்', பணம் விநியோகித்ததாகவும் குற்றம்சாட்டினர். படம்: ஊடகம் -

சென்னை: தமி­ழ­கத்­தில் நகர்ப்­புற உள்­ளாட்­சித் தேர்­த­லுக்­கான வாக்­குப்­ப­திவு இன்று ஒரே கட்­ட­மாக நடை­பெ­று­கிறது.

இந்­தத் தேர்­தலை அமை­தி­யாக நடத்­து­வ­தற்கு ஏது­வாக, வழக்­கம்­போல் பாது­காப்பு ஏற்­பா­டு­களை மட்­டும் செய்­யா­மல், மாநி­லத் தேர்­தல் ஆணை­ய­மும் தமி­ழக காவல்­து­றை­யும் சற்று கூடு­தல் ஏற்­பாடு களை­யும் செய்­துள்­ளன.

முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக, மாநி­லம் முழு­வ­தும் அமைதி யைக் குலைக்­கும் வகை­யில் செயல்­படும் ஆயி­ரக்­க­ணக்­காேனா ரைக் கைது செய்து சிறை­யில் அடைத்­துள்­ள­னர்.

அனைத்து வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும் சிசி­டிவி கேம­ராக்­கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன.

அத்­து­டன், பதற்­ற­மான வாக்­குச்­சா­வ­டி­களில் 'வெப் கேமரா' பொருத்­தப்­பட்டு நேர­டி­யாக கட்­டுப்­பாட்டு அறை­யில் இருந்து கண்­கா­ணிக்க உள்­ள­னர்.

சென்னை உள்­பட 21 மாந­க­ராட்­சி­கள், 138 நக­ராட்­சி­கள், 489 பேரூ­ராட்­சிகள் பதவிகளுக்கு இன்று 31,029 வாக்­குச்­சா­வ­டி­களில் வாக்­க­ளிப்பு நடை­பெ­று­கிறது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க வாக்­குச்­சா­வ­டி­களில் வெப்ப மானி, கிரு­மி­நா­சினி, முகக்­க­வ­சம், கையு­றை­கள், பாது­காப்­புக் கவ­சம் ஆகி­யன தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளன.

தேர்­தல் பணி­யில் 133,000 பணி­யா­ளர்­கள் ஈடு­ப­டு­கி­றார்­கள்.

வாக்­குப்­ப­தி­வின்­போது மாநி­லம் முழு­வ­தும் 113,073 காவல்­துறை அதி­கா­ரி­கள் பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட உள்­ள­தாகவும் சென்­னை­யில் 18,000 காவ­லர்­கள் பாது­காப்பு வழங்க உள்­ள­தா­க­வும் டிஜிபி சைலேந்­தி­ர­பாபு தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே, கொரோனா பாதிப்பு கார­ண­மாக பொரு­ளா­தார ரீதி­யாக பாதிக்­கப்­பட்ட பெரும்­பாலா னோர் கடன் வாங்கி இத்­தேர்­த­லுக் காக செலவு செய்­துள்­ள­னர். இத னால் 'வென்­றால் மன்­னன், தோற்­றால் நாடோடி' என்ற நிலையே பெரும்­பா­லான வேட்­பா­ளர்­க­ளின் மன­நி­லை­யாக உள்­ளது.

பல்­லா­யி­ரம் வேட்­பா­ளர்­க­ளின் நிலை இத்­தேர்­த­லில் தோற்­றால் கேள்­விக்­கு­றி­யாகிவிடும் என்­பதால், பெரும்பாலானோர் வெற்­றியை நோக்­கியே காய் நகர்த்தி உள்­ள­னர். இதற்­காக பல­ரும் தங்­கள் வரம்புகளை மீறி செயல்­பட்­ட­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இப்­போ­தைய வாக்­க­ளிப்­பில் எந்தப் பிரச்­சிை­ன­யும் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தில் தேர்­தல் ஆணை­ய­மும் காவல்­துறை நிர்­வா­க­மும் கூடு­தல் கவ­னத்­து­டன் கைகோத்­துள்­ள­தா­க­வும் தக­வல்­கள் குறிப்­பிட்­டுள்­ளன.